This Article is From Jul 08, 2018

தமிழகத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படை கைது!

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டி கைது செய்துள்ளது இலங்கை கடற்படை

தமிழகத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படை கைது!

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டி கைது செய்துள்ளது இலங்கை கடற்படை.

ராமேஸ்வரம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் ஆழ்கடல் மீன் பிடிப்புப் படகுடன் கச்சத்தீவு அருகே மீன் பிடித்திருந்தனர். அப்போது அங்கே வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை சுற்றி வளைத்தனர். எல்லைத் தாண்டியதாகவும், தடை செய்யப்பட்ட வலையைப் பயன்படுத்தி மீன் பிடித்ததாகவும் குற்றம் சாட்டி 4 மீனவர்களையும் கைது செய்தனர். மேலும், அவர்களது படகையும் கைப்பற்றினர் இலங்கை கட்றபடையினர். 

‘கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர்’ என்று மீன்வளத் துறை அதிகாரி கோபிநாத் தகவல் தெரிவித்துள்ளார். 

மேலும், கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் 200 படகுகளையும் விரட்டியடித்துள்ளது இலங்கை கடற்படை. இதனால், மீனவர்கள் வெறும் கையுடன் கரைக்குத் திரும்பியுள்ளனர். கடந்த 5 ஆம் தேதி, 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது குறிப்பிடத்தக்கது. 



(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)

.