This Article is From Jun 14, 2019

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 4 பேருக்கு ஜாமீன்

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிங்ம் லோகேஷ் ஷர்மா, மனோகர் நர்வாரியா மற்றும் ராஜேந்திர சவுத்ரி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 4 பேருக்கு ஜாமீன்

2006 செப்டம்பரில் 8ல் நாசிக் அருகே உள்ள மாலேகானில் ஹமீதியா மசூதிக்கு அருகே நடந்த குண்டு வெடிப்பில் 37 பேர் கொல்லப்பட்டனர்.

Mumbai:

2006 ஆம் ஆண்டு மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கு மும்பை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியுள்ளது. 

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிங்ம் லோகேஷ் ஷர்மா, மனோகர் நர்வாரியா மற்றும் ராஜேந்திர சவுத்ரி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் ஐ.ஏ.மஹந்தி மற்றும் ஏ.எம்.பட்கர் ஆகியோர் அடங்கிய  அமர்வு இதற்கான உத்தரவை வழங்கியுள்ளது. 

ஜாமீன் உத்தரவின் போது நீதிபதிகள், “ஜாமீன் மனுக்கள் அனுமதிக்கப்படுகின்றன. மனுதாரர்கள் ரூ.50,000 ரொக்கப் பிணையில் விடுவிக்கப் படுவார்கள். சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் ஒவ்வொரு நாளும் அவர்கள் கலந்து கொள்ள வேண்டும். அவர்கள் இவ்வழக்கு தொடர்பான சான்றுகளையோ அல்லது சாட்சிகளையோ தொடர்பு கொள்ளக்கூடாது” இவ்வாறு ஜாமீன் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2013 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டதில் இருந்து சிறையில் இருந்து வருகின்றனர். 

2006 செப்டம்பரில் 8ல் நாசிக் அருகே உள்ள மாலேகானில் ஹமீதியா மசூதிக்கு அருகே நடந்த குண்டு வெடிப்பில் 37 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். 

ஆரம்பத்தில் மகாராஷ்டிராவின் தீவிரவாத தடுப்பு நடவடிக்கை பிரிவு போலீஸார் ஆரம்பத்தில் இந்த வழக்கை விசாரித்த போது 9 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேருடன் சிங், ஷர்மா, நர்வாரியா மற்றும் சவுத்திரி ஆகிய நான்கு பேர் மீதும் புதியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

.