This Article is From Aug 11, 2018

தமிழகத்தைச் சேர்ந்த 27 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது!

தமிழகத்தைச் சேர்ந்த 27 மீனவர்களை இலங்கை கடற்படை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்துள்ளது

தமிழகத்தைச் சேர்ந்த 27 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது!
Rameswaram:

தமிழகத்தைச் சேர்ந்த 27 மீனவர்களை இலங்கை கடற்படை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்துள்ளது. இது குறித்த தகவலை மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டிணம், புதுக்கோட்டை, தொண்டி ஆகிய பகுதிகளிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களை கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த 4 நாட்டுப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் தவறுதலாக இலங்கைக்கு உட்பட்ட எல்லைக்குச் சென்றுவிட்டதாக அதிகாரி கூறியுள்ளார். 

.