எம்.ஜே.அக்பருக்கு எதிராக பிரியா ரமணியுடன் அணி திரளும் பத்திரிகையாளர்கள்!

எம்.ஜே. அக்பர் #MeToo இயக்கத்தின் மூலம் வெளியான பல பாலியல் தொல்லைகள் கொடுத்தவர்களின் வரிசையில் உள்ள பிரதான பெயர் ஆகும்

எம்.ஜே.அக்பருக்கு எதிராக பிரியா ரமணியுடன் அணி திரளும் பத்திரிகையாளர்கள்!

20 பெண் பத்திரிகையாளர்கள் அவருக்கு எதிராக சாட்சியளிக்க இருக்கிறார்கள்

New Delhi:

எம்.ஜே. அக்பர் #MeToo இயக்கத்தின் மூலம் வெளியான பல பாலியல் தொல்லைகள் கொடுத்தவர்களின் வரிசையில் உள்ள பிரதான பெயர் ஆகும். சில பத்தரிக்கையாளர் மீது பாலியல் வன்முறை நடந்ததுள்ள நிலையில் பலர் இது குறித்து நீதிமன்றத்தில் சாட்சி கூற முன்வந்துள்ளார்கள். மேலும், எம்.ஜே.அக்பருக்கு எதிராக உள்ள தங்களது சாட்சிகளை கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுடெல்லி #MeToo இயக்கம் மூலம், “ஏசியன் ஏஜ்” பத்திரிகையில் பணிபுரிந்த பிரியா ரமணி மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். ஏசியன் ஏஜில் பணி புரிந்த பெண் பத்திரிகையாளர்கள் இப்போது ஒன்று திரண்டு பத்திரிகையாளர் பிரியா ரமணிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் தெடர்ந்துள்ள ஒரு அவதூறு வழக்கிற்கு பதிலடியாக இப்போது 20 பெண் பத்திரிகையாளர்கள் அவருக்கு எதிராக சாட்சியளிக்க இருக்கிறார்கள்.

ஏசியன் ஏஜ் பத்திரிக்கையின் ஆசிரியர் ஆக இருந்த போது எம்.ஜே. அக்பர் பாலியல் தொல்லை கொடுத்தாக பிரியா ரமணி ட்விட்டரில் #MeToo இயக்கத்தின் மூலம் பதிவிட்டார். இதை தொடர்ந்து பிரியா தனது மேல் பொய்யான குற்றச்சாட்டு வைப்பதாக கூறி அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதையொட்டி ஏசியன் ஏஜ் பத்திரிகையில் பணியாற்றிய முன்னாள் பத்திரிக்கையாளர்கள் இணைந்து பிரியாவுக்கு ஆதரவாக தங்களது சாட்சிகளை கூற உள்ளனர்.

“அக்பர் தனது வழக்குகளின் மூலம் அவர் இத்தனை காலமாக பல பெண்களுக்கு தான் செய்த வன்முறைகளை மறைக்க பார்க்கிறார். ஆனால் மத்திய அமைச்சர் என்னும் பதவியை வைத்துக்கொண்டு அவர் தொடர்ந்து பல குற்றங்கள் செய்து வருகிறார்.”என ஏசியன் ஏஜ் பத்திரிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் அவர்கள் கூறுகையில் “ரமணி தனது தனிப்பட்ட பாதிப்பு பற்றி மட்டும் இல்லாமல் நமது கலாச்சாரத்தின் மேல் படிந்த கரைக்காக போராடுகிறார். அக்பர் இத்தனைக்காலமாக செய்த குற்றங்களுக்கு எதிராக ரமணி தனியாக போராட வேண்டாம். நீதிமன்றம் அக்பர் கொடுத்த அவதூறு வழக்கை விசாரித்த பிறகு தங்களை சாட்சிகளாக சேர்க்க வேண்டும் என கூறினர்.

பத்திரிகையாளர்கள் மீணல் பாகேயல், மணிஷா பாண்டே, துஷிதா பாட்டீல், கன்னிகா காஹலட் , சுபர்ணா ஷர்மா, ராமோலா தல்வார் பாதாம், ஹாஹினு ஹாஜுல், ஆயிஷா கான், ரேஷ்மூ சக்கர்போர்த்தி, கூஷால்ராணி குலாப் மற்றும் டெக்கன் கிரானிக்கல் பத்திரிகையைச் சேர்ந்த கிறிஸ்டினா பிரான்ஸ் ஒப்பந்தத்தில் ஒப்பிட்டனர்.

அக்பர், 67, #MeToo இயக்கத்தில் வெளியான பல பாலியல் தொல்லைகளில் இடம்பெற்ற பிரதான பெயர் ஆகும். குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பத்திரிகையாளர் தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய மறுத்தார். மேலும் தன் மீது ஒரு பொய்யான வழக்கு போடப்பட்டதாக கூறி பத்திரிக்கையாளர் ரமணியின் மேல் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.