அசாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் 20 பேர் உயிரிழப்பு; மேலும் பலர் காயம்!

இப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

அசாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் 20 பேர் உயிரிழப்பு; மேலும் பலர் காயம்!

இப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. 

Guwahati:

அசாம் மாநிலத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் 20 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் தெற்கு அசாமில் உள்ள பராக் பள்ளத்தாக்கு பகுதியின் மூன்று வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. 

இதில் கச்சார் மாவட்டத்தை சேர்ந்த ஏழு பேரும், ஹைலகண்டி மாவட்டத்தை சேர்ந்த ஏழு பேரும், கரிம்கஞ்ச் மாவட்டத்தில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.

வடகிழக்கு மாநிலமான அசாமில் ஏற்கனவே ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் 3.5 லட்சம் மக்கள் வரை போராடி வருகின்றனர். இதில், கோல்பாரா மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து நாகான் மற்றும் ஹோஜாய் உள்ளன.

இதுதொடர்பாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில், வெள்ளத்தால் 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 348 கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளன. ஏறக்குறைய 27,000 ஹெக்டேர் பயிர்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிலச்சரிவுகளைத் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தவும், உறவினர்களை இழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும் அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.