This Article is From Jun 11, 2019

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 2 வயது குழந்தை! 109 மணி நேர போராட்டம் வீணானது!

பஞ்சாபில் 150 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய 2 வயது குழந்தை 4 நாட்கள் போராட்டத்திற்கு பின் இன்று அதிகாலை மீட்கப்பட்டது.

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 2 வயது குழந்தை! 109 மணி நேர போராட்டம் வீணானது!

மீட்கப்பட்டவுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அந்த குழந்தையை அழைத்துச்சென்றனர்.

Sangrur:

பஞ்சாபில் 150 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய 2 வயது குழந்தை 4 நாட்கள் போராட்டத்திற்கு பின் இன்று அதிகாலை மீட்கப்பட்ட நிலையில், தற்போது உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டம் பகவான்புரா கிராமத்தில் பதேவீர் என்ற 2 வயது குழந்தை கடந்த வியாழனன்று மாலையில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தது. நீண்ட நேரமாகியும் குழந்தையை காணததான் அதன் பெற்றோர் தேடத் தொடங்கினர்.

இறுதியில் குழந்தை பதேவீர் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை போருக்குள் விழுந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்பு பணிகளுக்கான ஏற்பாடுகள் தொடங்கின. இருப்பினும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டது.

குழந்தைக்கு தண்ணீர், உணவு ஏதும் அளிக்கப்படாத நிலையில் அவருக்கு ஆக்ஸிஜன் மட்டும் செலுத்தப்பட்டு வருவதாக மீட்பு பணி அதிகாரிகள் தெரிவித்தனர். தேசிய பேரிடர் மீட்பு படை, உள்ளூர் அதிகாரிகள், கிராம மக்கள் என ஏராளமானோர் குழந்தையை மீட்க போராடினர்.

இந்நிலையில், 5 நாட்கள் கடும் போராட்டத்திற்கு பின்னர், இன்று காலை 5.30 மணி அளவில், தேசிய பேரிடர் மீட்பு படையினரால் மீட்கப்பட்டது. குழந்தை மீட்கப்பட்ட உடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டது.

சம்பவ இடத்திற்கு அருகிலே மாநில அரசின் ஹெலிகாப்டர் இருந்த போதிலும், 140 கி.மீ தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு சாலை மூலமாகவே குழந்தையை அழைத்துச்சென்றனர்.

குழந்தையின் உடல்நிலை குறித்து எந்த தகவலும் வெளிவராமல் இருந்த நிலையில், தற்போது உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அம்மாநில முதல்வர் அமரேந்திர சிங் நேற்று மாலை அவரது ட்விட்டர் பதிவில் கூறும்போது, தொடர்ந்து, தேசிய பேரிடரின் மீட்பு பணிகள் குறித்து கண்காணித்து வருகிறேன்.

மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இது போன்று திறந்து கிடக்கும் ஆழ்துளை கிணறுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க துணை ஆணையர்களுர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

.