மேற்கு வங்கத்தில் நீதிபதிகள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மேற்கு வங்கத்தில் மட்டும் 7,303 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  உயிரிழந்தவர்கள், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களை தவிர்த்து தற்போது 4,025 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர். 

மேற்கு வங்கத்தில் நீதிபதிகள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

கொரோனா பாதிப்பால் மேற்கு வங்கத்தில் 250க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

Kolkata:

மேற்கு வங்கத்தில் நீதிபதிகள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் கொல்கத்தா நகர நீதிமன்றத்தில் பணியாற்றி வருகின்றனர். 

கொரோனாவால்  பாதிக்கப்பட்ட நீதிபதிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். 

பாதிக்கப்பட்ட நீதிபதிகள் கொல்கத்தா மாவட்ட சிவில் நீதிமன்றத்தில்  பணியாற்றுகின்றனர்.  தற்போது அவர்கள் இருவரும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

மேற்கு வங்கத்தில் மட்டும் 7,303 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  உயிரிழந்தவர்கள், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களை தவிர்த்து தற்போது 4,025 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர். (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)