‘2.0’ இந்தியில் செய்த சாதனை..!

வெள்ளியன்று 2.0, 5.85 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், சனியன்று 9.15 கோடி ரூபாயை அப்படம் வசூலித்துள்ளது

 Share
EMAIL
PRINT
COMMENTS
‘2.0’ இந்தியில் செய்த சாதனை..!

2.0 திரைப்படத்திலிருந்து ஒரு படம்


New Delhi: 

ரஜினி, அக்‌ஷய் குமார் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்து, ஷங்கர் இயக்கத்தில் கடந்த மாதம் 29 ஆம் தேதி திரைக்கு வந்த ‘2.0' திரைப்படம் தொடர்ந்து சாதனைகளை முறியடித்து வருகிறது.

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியான 2.0, ரிலீஸான முதல் வாரத்திலேயே 500 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்நிலையில், 2.0 இந்தி வெளியீடு மட்டும், இதுவரை 150 கோடி ரூபாய் கலெக்ஷனை அள்ளியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

 

 

இது குறித்து தரண் ஆதர்ஷ் என்கின்ற சினிமா வல்லுநர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இரண்டாவது வாரத்தில் தொடர்ந்து நன்றாக ஓடி வருகிறது 2.0 இந்தி வெர்ஷன். கடந்த வெள்ளிக்கிழமையை ஒப்பிடும் போது சனிக்கிழமையன்று அதன் டிக்கெட் விற்பனை 56.41 சதவிகிதம் அதிகரித்துள்ளது. வெள்ளியன்று 2.0, 5.85 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், சனியன்று 9.15 கோடி ரூபாயை அப்படம் வசூலித்துள்ளது. இந்தியாவில் வெளியான 2.0 இந்தி வெர்ஷன் மட்டும் இதுவரை 154.75 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது' என்று பதிவிட்டுள்ளார்.

2.0, இந்தி பதிப்பை, பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹரின், ‘தர்மா புரொடக்‌ஷன்ஸ்' விநியோகம் செய்தது. இந்தியில் 2.0 திரைப்படத்திற்குப் பிறகு பல படங்கள் வந்திருந்தாலும், தொடர்ந்து முன்னிலையில் ரஜினியின் படமே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................