Kota, Rajasthan: ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள தீம் பார்க் ஒன்றில் 19 வயது சிறுவன் குளத்தில் மூழ்கி பலியானதாக காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோட்டாவின், மகாவீர் நகரில் வசித்து வந்த அஷுடோஷ் மகாஜன் என்பவர் குன்ஹாரி என்ற இடத்தில் உள்ள தீம் பார்க்கிற்கு தனது நண்பர்களுடன் சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
இது பற்றி பலியான அஷுடோஷ் மகாஜனின் நண்பர்கள் காவல் துறையினரிடம் கூறியதாவது “அஷுடோஷ், குளத்தில் குதித்து சில நிமிடங்கள் கழித்தும் வெளியே வராததால் தீம் பார்க் ஊழியர்களிடம் உதவி கேட்டோம். ஆனால், அவர்கள் வந்து, குளத்தில் இருந்து அஷுடோஷை வெளியே எடுக்கும் போது அவர் இறந்து நிலையில் இருந்தார்” என்றனர்.
அவர் குளத்தில் குதிக்கும் போது தலையில் அடி பட்டிருக்க வேண்டும் என்று காவல் துறை ஆய்வாளர் தரம்பால். அதேநேரம், அஷ்டோஷுக்கு நன்றாகவே நீச்சல் தெரியும் என்று அவரது தந்தை கூறுகிறார்.
அஷுடோஷ் மஹாஜனின் உடல், மகாராஜா பீம்சிங் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரது உடலை மகாஜன் குடும்பத்தினர் வீட்டிற்கு எடுத்துச் செல்ல மறுத்து காவல் துறையிடம் புகார் கொடுத்துள்ளனர். அதை பற்றி காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக உதவி ஆய்வாளர் தரம்பால் தெரிவித்துள்ளார்.