This Article is From Feb 28, 2019

15.18 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி- திட்டத்தை துவங்கி வைத்த முதல்வர்

7 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கி திட்டத்தை துவங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

15.18 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி- திட்டத்தை துவங்கி வைத்த முதல்வர்

15.18 லட்சம் மாணவர்கள் இந்தத் திட்டம் மூலம் பயன் பெற உள்ளனர்

Chennai:

தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் 2011 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதாவால் ஆரம்பிக்கப்பட்டது.

அதன்படி, இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2018-2019 கல்வியாண்டில் பயிலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டததை துவங்கி வைத்தார்.

நேற்று தமிழக தலைமைச் செயலகத்தில் வைத்து 2018-2019 ஆம் கல்வியாண்டில் பயிலும் 7 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினியை வழங்கினார் முதல்வர் பழனிசாமி.

அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, 2018-2019 கல்வியாண்டில் 15.18 இலட்ச மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும். இதற்கு 1,304.44 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு முதல் இதுவரை 5,552.39 கோடி ரூபாய் செலவில் 37,88,528 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.

 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.