This Article is From Jan 19, 2019

#10yearchallange ட்ரெண்டிங் நல்லதா கெட்டதா...?

சமூக வலைதளங்களில் ஏதேனும் ஒரு விஷயம் அன்றாடம் ட்ரெண்டிங் ஆகிக் கொண்டே இருக்கும். இப்போது ட்ரெண்டிங்கில் இருப்பது #10yearchallange தான்

#10yearchallange ட்ரெண்டிங் நல்லதா கெட்டதா...?

சமூக வலைதளங்களில் ஏதேனும் ஒரு விஷயம் அன்றாடம் ட்ரெண்டிங் ஆகிக் கொண்டே இருக்கும். இப்போது ட்ரெண்டிங்கில் இருப்பது #10yearchallange தான். பத்து வருடத்திற்கு முன்பிருந்த புகைப்படத்தையும் இன்று இருக்கும் புகைப்படத்தையும் இணைத்து போடுவதுதான் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கும் ஹேஷ்டாக்கின் வழக்கம்.

இப்படி புகைப்படம் போடுவதால் என்ன கெட்டு விடப் போகிறது என்று நினைக்கலாம். ஆனால் சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒவ்வொரு நிகழ்வுக்கு பின்னும் ஏதேனும் காரணமும் நிச்சயமாக இருக்கும். சமீப நாட்களில் ஃபேஸ்புக்கில் இருந்து பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும் அதற்கு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த பத்து வருட சேலன்ஞ் குறித்து பிபிசி தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி ஃபேஸ்புக் நிறுவனம் இந்த ட்ரெண்டிங்கை தாங்கள் தொடங்கவில்லை என்றும் ஃபேஸ்புக் பயனாளர் உருவாக்கிய மீம் தான் தற்போது வைரலாகி உள்ளதாகக் கூறியுள்ளது.

இந்த மாதிரியான ட்ரெண்டிங்குகளின் நோக்கமே சமூக வலைதள பயனாளர்களின் தகவல்களை திருடவதற்காக உருவாகப்படுகிறது. இதிலிருந்து விலகி இருப்பதே நல்லது என்று தெரிவிக்கிறது.
சைபர் சட்ட வல்லுநர் “இதுவரை கிடைத்திராத பழைய புகைப்படங்கள் இப்போது கிடைக்கிறது, மக்களே அதை வழங்குகின்றனர். இந்தப் புகைப்படங்கள் மார்ஃபிங் செய்யப்படலாம் அல்லது பேஸ்புக் ரெகக்னிஷன் தொழில் நுட்பத்திற்கான தகவல்களை உங்களையறியாமலே நீங்கள் கொடுக்கிறீர்கள்”என்பதுதான் உண்மை என்கிறார்.

இன்று பல நிறுவனங்கள் சமூக வலைதளங்களை தனிமனிதர்களின் தகவல்களைத் திரட்ட பயன்படுத்தி வருகிறது என்பதுதான் உண்மை. உங்களைப் பற்றிய உண்மைகளை அறிந்தே வெளிப்படுத்துவதை நிறுத்துவதுதான் நல்லது.

.