This Article is From Jul 19, 2018

நீதிபதி வீட்டிலிருந்து மாயமான வழக்கு கோப்புகள்… சிபிஐ விசாரிக்க உத்தரவு!

உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த மதிவாணன் வீட்டிலிருந்த 100 கட்டுகள் வழக்கு கோப்புகள் மாயமாகியுள்ளன. இது தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவு

நீதிபதி வீட்டிலிருந்து மாயமான வழக்கு கோப்புகள்… சிபிஐ விசாரிக்க உத்தரவு!

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த மதிவாணன் வீட்டிலிருந்த 100 கட்டுகள் அளவிலான வழக்கு கோப்புகள் மாயமாகியுள்ளன. இது தொடர்பாக தற்போது சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் தேதி, தான் தொடர்ந்திருந்த வழக்கில் உத்தரவு பிறிக்கப்பட்ட பின்னரும் அது குறித்தான நகல் தனத்து வரவில்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நீதிபதி மதிவாணன் தான் வழக்கை விசாரித்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்து. இதையடுத்து, உயர் நீதிமன்ற காப்பகத்தில் இது குறுத்து தெரியபடுத்தப்பட்டது. காப்பகம் தான், ‘100 கட்டுகள் அளவிலான வழக்கு கோப்புகள் மதிவாணன் நீதிபதியாக இருந்த போது அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதையடுத்து தான், கோப்புகள் மாயமாகியுள்ளன’ என்று கண்டுபிடித்தது.

பின்னர் இந்த வழக்கு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அவர், ‘எப்படி இவ்வளவு வழக்கு கோப்புகள் தொலைந்து போனது என்பது மிரட்சியாக உள்ளது. இப்படி தொலைந்துபோன கோப்புகளில், பலவற்றில் வழக்குகள் குறித்த தீர்ப்புகளும் அடங்கியுள்ளன. மீண்டும் கோப்புகளை உருவாக்கும் முயற்சியைத் தான் தற்போதைக்கு மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், முன்னாள் நீதிபதி ஒருவரது வீட்டிலிருந்து 100 கட்டுகள் அளவிலான வழக்கு கோப்புகள் காணாமல் போயுள்ளது சாதாரண விஷயம் அல்ல. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி முன்னரே விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால், அதில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே இது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்’ என்று உத்தவிட்டுள்ளார். 
 

.