This Article is From Jun 22, 2020

சென்னையில் 1.20 லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன: மாநகராட்சி ஆணையர்

சென்னை மாநகராட்சி முழுவதும் 500 முதல் 550 மருத்துவ முகாம்கள் தினந்தோறும் நடத்தப்படுகின்றன.

சென்னையில் 1.20 லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன: மாநகராட்சி ஆணையர்

சென்னையில் 1.20 லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன: மாநகராட்சி ஆணையர்

ஹைலைட்ஸ்

  • சென்னையில் 1.20 லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன
  • பாதிப்பு எண்ணிக்கை கடுமையாக உயர்ந்ததால், அங்கு 12 நாள் ஊரடங்கு அமல்
  • 10-15 தெருக்களுக்கு ஒரு தன்னார்வலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் 1.20 லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில், பாதிப்பு எண்ணிக்கை கடுமையாக உயர்ந்ததால், அங்கு 12 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் பிரகாஷ் கூறியதாவது, சென்னை மாநகராட்சி முழுவதும் 500 முதல் 550 மருத்துவ முகாம்கள் தினந்தோறும் நடத்தப்படுகின்றன. 200 வார்டுகளில் குறைந்தபட்சம் 2 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. 

எந்தெந்தப் பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன என்பது இணையதளம், ட்விட்டர் வாயிலாகத் தெரிவிக்கப்படுகின்றன. மேலும், அந்தந்தப் பகுதிகளில் ஆட்டோக்கள் மூலமாகவும் அறிவிக்கிறோம்.

சென்னையில் 1.20 லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாக உள்ளன. தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளோருக்கு உதவ சுமார் 4 ஆயிரம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் தங்களுக்கு நியமிக்கப்பட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு நாள் முடிவில் மாநகராட்சிக்கு அறிக்கையை சமர்ப்பிக்கின்றனர்.

ஒவ்வொரு வார்டுக்குள் உள்ள தெருக்களையும் பிரித்து, அதிகமானோர் வசிக்கக்கூடிய தெருக்களாக இருந்தால் 5 தெருக்களுக்கு ஒரு தன்னார்வலர், சிறிய தெருக்களாக இருந்தால் 10-15 தெருக்களுக்கு ஒரு தன்னார்வலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளைக் கண்காணிப்பர். அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வராதவாறு தேவையான உதவிகளைத் தன்னார்வலர்கள் மேற்கொள்வர் என்று அவர் கூறினார்.

.