சர்வதேச யோகா தினம்: பிரதமர் மோடியுடன் மோட்டுவும் பட்லுவும் யோகா செய்தனர்

Yoga Day: பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் இந்த விழாவில் 30,000 பேர் கலந்து கொண்டனர்.

சர்வதேச யோகா தினம்:  பிரதமர் மோடியுடன் மோட்டுவும் பட்லுவும் யோகா செய்தனர்

International Yoga Day: இந்த நிகழ்ச்சி 45 நிமிடங்கள் வரை நடந்தன.

Ranchi:

ஐந்தாவது சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ராஞ்சியில் யோக நிகழ்வில் கலந்து கொண்டார். அந்நிகழ்வில் குழந்தைகளை கவருவதற்காக பிரபலமான கார்ட்டூர் கதாபாத்திரங்களான மோட்டு பட்லு போல் வேடமிட்டு இருவர் யோகா செய்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் இந்த விழாவில் 30,000 பேர் கலந்து கொண்டனர். குழந்தைகளை இந்த யோக நிகழ்ச்சியில் ஈர்ப்பதற்காக இந்த கார்ட்டூன் கதாபாத்திரங்களை யோக  செய்ய வைக்கும் முயற்சியை கையில் எடுத்துள்ளது ஜார்கண்ட் மாநில அரசு.

0uf84oj8

இந்த நிகழ்ச்சி 45 நிமிடங்கள் வரை நடந்தன.

ஜார்கண்ட் ஆளுநர் திரெளபதி முர்மு, முதலமைச்சர் ரகுபர் தாஸ், அமைச்சர் ஶ்ரீபட் நாயக், மாநில சுகாதார அமைச்சர் ராமச்சந்திர கேசரி மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

More News