This Article is From Apr 30, 2019

எட்டி யார்...? பனிமனிதன் குறித்த புகைப்படங்களும் கட்டுக்கதைகளும்

Yeti footprints: இப்போது எட்டியின் காலடி இதுதான்  என்று கூறி இந்திய ராணுவம் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இந்திய ராணுவம் இமயமலையில் சுமார் 32X15 இஞ்ச் அல்லது 81X38 செ.மீ நீளமுள்ள பாதச் சுவடுகளை மகுலு பாருன் தேசிய பூங்கா அருகில்  படம் பிடித்துள்ளது. 

எட்டி யார்...? பனிமனிதன் குறித்த புகைப்படங்களும் கட்டுக்கதைகளும்

பனிமனிதன் மனித குரங்கு போன்ற தோற்றத்துடன் இருப்பதாக நம்பப்படுகிறது. (Representational)

New Delhi:

எட்டி என்றால் என்ன தெரியுமா…? பனிமனிதன் தாங்க் எட்டி. பனிமனிதன் குறித்து எத்தனைவிதமான செவிவழிக் கதைகள் இன்றளவும் பனி பொழியும் நாடுகளில் இருந்து வருகிறது. நீண்டகாலமாக இமய மலைகளீல் பனிமனிதன் வாழ்வதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் ஏதும் இதுவரைக் கிடைக்கவில்லை.

சராசரி மனிதனை விட பெரிய தோற்றத்துடன் பனி மனிதன் இருப்பான் என நம்பப்படுகிறது. இந்த பனி மனிதன் குறித்தும் அவனது வாழ்வியல் குறித்தும் செவி வழிக் கதைகள் பல உண்டு. 

இந்நிலையில் எட்டி எனப்படும் பனி மனிதனை பனி மலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் இந்திய ராணுவ வீரர்கள் கண்டதாகக் கூறப்படுகிறது. இந்திய ராணுத்தி ட்விட்ட்டர் பக்கத்தில் காலடித் தடங்கள் பற்றிய புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. 

இப்போது எட்டியின் காலடி இதுதான்  என்று கூறி இந்திய ராணுவம் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இந்திய ராணுவம் இமயமலையில் சுமார் 32X15 இஞ்ச் அல்லது 81X38 செ.மீ நீளமுள்ள பாதச் சுவடுகளை மகுலு பாருன் தேசிய பூங்கா அருகில்  படம் பிடித்துள்ளது. 

19 ஆம் நூற்றாண்டுகளில் பனிவிழும் நாடுகளில் வாழ்பவர்கள் மண்ணின் கடவுளாக எண்ணி வழிபடுவதுண்டு. நேபாளத்தில் மக்கள் பனி மனிதன் ஒரு மனிதக் குரங்கு போன்ற தோற்றத்துடன் இருக்கும் என்றும். சாதாரண மனிதனின் உயரத்தை விட மிகப்பெரிய உயரத்துடன் இருக்கும் என இமயமலை, சைபீரியா, மத்திய மற்றும் கிழக்கு ஆசியாவில் நம்பப்படுகிறது. 

எட்டியின் வெவ்வேறு பெயர்கள்

இமயமலையில் மக்கள் பனிமனிதனை மெஹ் -திஹ் என்று கூறுகின்றனர். திபெத்திய மொழியில் ‘மிச்சி' அதாவது மனிதக் கரடி என்று அழைக்கின்றனர்.

.