This Article is From May 31, 2019

உலக ட்ரெண்டிங்கில் 'நேசமணி', ஒரு மீம் தொகுப்பு! #Nesamani

நேசமணியோட அண்ணன் மகன் கிருஷ்ணமூர்த்தி, இவர் நடு மண்டையில சுத்தியலை போட்டு, இவர் அங்கேயே மூச்சு பேச்சில்லாம சுருண்டு விழுந்துட்டார்.

உலக ட்ரெண்டிங்கில் 'நேசமணி', ஒரு மீம் தொகுப்பு! #Nesamani

18 வருசத்துக்கு முன்னாடி நடந்ததா சொல்றாங்க. அப்போ அவன் பெரிய ஆள் கூட இல்லையாம். ஒரு மாளிகையில தன் குழுவோட  வேலைக்கு சென்றாத சொல்றாங்க. அங்க அவரு தன் குழுவில இருந்தவங்களுக்கு என்ன வேலை செய்யனும்னு சொல்லிக்கிட்டிருந்தாரு. அப்போ, அவருக்கு நேரா மேல நின்னு ஆணி பிடிங்கிட்டு இருந்த அவரோட அண்ணன் மகன் கிருஷ்ணமூர்த்தி, அவர் நடு மண்டையில சுத்தியலை போட்டு, அவர் அங்கேயே மூச்சு பேச்சில்லாம சுருண்டு விழுந்துட்டார். 

இது நடந்து 18 வருசம் ஆச்சு, இப்ப திரும்பவும் நேசமணியை பற்றி பேச ஆரம்பிச்சிருக்காங்க. அவர் அண்ணன் மகன் கிருஷ்ணமூர்த்தி உள்நோக்கத்தோடதான் சுத்தியலை தலைமேல வேணும்னேதான் செஞ்சிருக்கார், கிருஷ்ணமூர்த்திக்கும் நேசமணிக்கு முன்விரோதம் இருந்துச்சு அப்படினு நெரைய பேர் சொல்றாங்க. ஆன இதுக்கெல்லாம், ஒரு வலுவான சாட்சி இன்னும் கிடைக்கல. 

நேசமணியோட உடல்நிலை பற்றி கவலையடந்த மக்கள் #Pray_For_Nesamani அப்படிங்கிற ஹேஸ்டேக்ல, சமூக வலைதளங்கள்ல நேசமணிக்காக வேண்டிக்கிட்டு வர்றாங்க. மேலும், அவங்க கிருஷ்ணமூர்த்தியை கைது செய்யனும்னு வேண்டுகோள் வைக்கிறாங்க. மேலும், இந்த சம்பவத்துல, கிருஷ்ணமூர்த்தியின் நண்பர்களான அரவிந்த் மற்றும் சந்துருவிற்கும் சமந்தம் இருக்கிறதா சொல்லப்படுது. மேலும், முன்னதாக இவங்க மூனு பேர் நேசமணி மேல ஒரு கொலை முயற்சி செஞ்சதாவும் கூறப்படுது.
 

May 30, 2019 19:12 (IST)
நேசமணி காதிலிருந்து ரத்தம் வருகிறதா? #WhyBloodSameBlood
ட்விட்டர் மீம்!

May 30, 2019 19:05 (IST)
அப்பா, அம்மா, அண்ணா!
May 30, 2019 18:53 (IST)
யார் இந்த லாசர் எலயப்பன்? #Lasar_Elayappan
நேசமணி பிறப்பதற்கு முன்பே, பிறந்தவர் தான் இந்த லாசர் எலயப்பன். மலையாளத்தில் 1999-ஆம் ஆண்டு வெளியான 'ஃப்ரண்ட்ஸ்' படத்தில் வரும் கதாப்பாத்திரம் தான் இந்த 'காண்ட்ராக்டர் லாசர் எலயப்பன்'


May 30, 2019 18:49 (IST)
தமிழகத்தில் நேசமணி, கேரளத்தில் லாசர் எலயப்பன் #Pray_for_LasarElayappan
தமிழக்கத்தில் நேசமணிக்கு வேண்டுவது போல, கேரளத்து நெட்டிசன்கள் லாசர் எலயப்பன் என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

May 30, 2019 18:26 (IST)
வடக்கே 'சவுக்கிதார்', தெற்கே 'காண்ட்ராக்டர்' #நேசமணி!
May 30, 2019 17:49 (IST)
உலகமே உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறது -நெட்டிசன்களின் பதிவுகள்!
May 30, 2019 17:42 (IST)
தலை கவசம் அணியுங்கள்!
நேசமணியின் ட்விட்டர் பயணத்தில் இணைந்த சென்னை காவல்துறை.
May 30, 2019 16:53 (IST)
நேசமணிக்கு நேர்ந்ததை விசாரிக்க வருகிறார் சத்யா!
May 30, 2019 16:16 (IST)
நேசமணி இன் 'மண்ட பத்திரம்' மீம் டெம்ப்லேட்!
'மண்ட பத்திரம்' என்று சொல்லிய நேசமணி, இன்று தன் மண்டையை பத்திரமாக பார்த்துக்கொள்ளாதது ஏன்?

May 30, 2019 16:12 (IST)
அடேய் எல்ல மீறி போறிங்க டா!
May 30, 2019 15:53 (IST)
இப்போ கண்ட்ராக்டர், முன்னால் கிரிக்கெட்டரா! #நேசமணி
May 30, 2019 15:49 (IST)
ஆத்தி தோரோட சுத்தியலா இது!
May 30, 2019 15:16 (IST)
இவர்களை கைது செய்யும் வரை இந்த பதிவை ஷேர் செய்யவும்!
நெட்டிசன்களின் ட்விட்டர் ஷேர்!


May 30, 2019 15:12 (IST)
உலக கோப்பை வந்த நேசமணியை மறந்துருவேமா?
இன்னும் ரெண்டு நாள் தான் சார், அப்பறம் உலக கோப்பை வந்துரும், அப்புறம் நேசமணியை மறந்துருவோம்! - நேட்டிசன்களின் கதறல்!

May 30, 2019 15:06 (IST)
நேசமணியை கவணித்த இந்த சமூகம், கோவாலை மறந்தது ஏன்?
'#We_Stand_With_Govalu' ஹேஸ்டேக்கில் பதிவுகளை பகிரும் நெட்டிசன்கள்!
May 30, 2019 15:02 (IST)
கல்லுலையும் அடிவாங்கியாச்சு, சுத்தியல்லுலையும் அடிவாங்கியாச்சு!
May 30, 2019 15:01 (IST)
நேசமணியின் உடல்நிலை பற்றி கூற பிச்சுமணி வருகிறாரா?
ட்விட்டர் வைரல் போட்டோ!

May 30, 2019 14:35 (IST)
இப்போ இருந்து இந்த மணி வெறும் மணியில்ல, 'நேசமணி'!
நேசமான யானையின் கழுத்தில் உள்ள மணி இன்று முதல் #நேசமணி -நடிகர் ஆரவ்வின் ட்விட்டர் பதிவு!

May 30, 2019 14:21 (IST)
எல்லாரும் கூப்பிடுங்க, "நேசமணி! நேசமணி!"
May 30, 2019 14:09 (IST)
நானும் காண்ட்ராக்டர் தான்- நடிகர் சித்தார்த்!
நானும் காண்ட்ராக்டர் என்று தன் பெயரை மாற்றியுள்ள சித்தார்த், நேசமணி விரைவில் மீண்டு வர வெண்டும் என பதிவிட்டுள்ளார்.

May 30, 2019 14:00 (IST)
மற்றவர்களின் ரியேக்சன் என்னவா இருக்கும்?
உலக ட்ரெண்டில் நேசமணி இருக்க, அது ஏன் என இந்த தமிழகத்திற்கு மட்டுமே தெரியும். அப்போது, மற்ற மாநிலங்களில் ரியேக்சன் என்னவா இருக்கும்?- ட்விட்டர் நெட்டிசன்களின் ஷேர்!

May 30, 2019 13:42 (IST)
நான் அப்பிடியே ஷாக் ஆகிட்டேன்!
ஓருவேளை, இந்த செய்தியை நேசமணியின் குடும்ப டாக்டர் கேள்விப்பட்டால், எப்படி ரியெக்ட் செய்திருப்பார், இது வடிவேலு ஸ்டைல்! -நெட்டிசன்களின் ட்விட்டர் பகிர்வு.

May 30, 2019 13:33 (IST)
ஏன் தமிழ்நாடு நேசமணிக்காக வேண்டுகிறது- ட்விட்டர் மூமென்ட்ஸ் இந்தியா!
ஏன் தமிழக மக்கள் நேசமணிக்காக வேண்டுகிறார்கள் என்ற தலைப்பில் ஒரு ட்விட்டர் பதிவுகளின் தொகுப்புகளை வெளியிட்டுள்ளது.

May 30, 2019 13:28 (IST)
தோனியால் மட்டுமே தான் நேசமணியை காப்பற்றிருக்க முடியும்!
தோனி மேலே இருந்து கீழே வரும் பந்தினை தாவி பிடிப்பது பொன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இவ்வாறு கூறியுள்ளது, சி.எஸ்.கே-வின் ட்விட்டர் பதிவு.

May 30, 2019 13:23 (IST)
ஓபிஎஸ் வருத்தம், மோடி ஆறுதல்
நேசமணி நிலையை கண்டு, ஓபிஎஸ் மனம் வருந்தியதாகவும், அவருக்கு மோடி ஆறுதல் கூறியதாகவும் நெட்டிசன்கள் ட்விட்டரில் பரப்பி வருகின்றனர்!

May 30, 2019 13:19 (IST)
நேசமணி இட்லி சாப்பிட்டார்!- நடிகை கஸ்தூரி ட்வீட்!
மருத்துவமணையில் சிசிடிவி கேமராக்கள் இல்லை, நேசமணி நலமாக உள்ளார், இட்லி மற்றும் உப்மா சாப்பிட்டார் என பதிவிட்டுள்ளார்.

May 30, 2019 13:04 (IST)
நிப்பான் பெயின்ட்ஸ் ட்வீட்!
"கிருஷ்ணமூர்த்தி எங்கள் பெய்ன்டர்களை போன்று பயிற்சி பெற்றிந்தால் இந்த மாதிரியான சம்பவம் நேர்ந்திருக்காது. நேசமணி விரைவில் குணமடைய வேண்டுகிறோம்."

May 30, 2019 12:50 (IST)
என் இனிய நண்பன் நேசமணிக்கு -ஹர்பஜன் சிங்!
வடிவேலு மஞ்சள் நிற தலைபாகை அணிந்திருப்பது போன்ற புகைப்படத்தை இணைத்து 'மீண்டு வா நேசா! #Pray_For_Nesamani' என்று பதிவிட்டிருந்த ஹர்பஜன் சிங்!

.