This Article is From Dec 14, 2018

''மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவோம்''- கடம்பூர் ராஜு உறுதி

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டு வருகிறது.

''மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவோம்''- கடம்பூர் ராஜு உறுதி

மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவோம் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டு வருகிறது. அங்கு அணையை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.

இதையடுத்து பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதற்கிடையே தமிழக அரசின் அனுமதி இன்றி கர்நாடகா அணையை கட்ட முடியாது என்று தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதை எந்தவகையிலாவது தடுத்து நிறுத்துவோம் என்று செய்தி மற்றும் விளம்ரபத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கடம்பூர் ராஜு கூறியிருப்பதாவது-

காவிரி பிரச்னைகள் தொடர்பாக விவாதிக்க காவிரி மேலாண்மை வாரியம் என்ற ஒன்று இருக்கிறது. தமிழகம் மட்டுமல்ல புதுச்சேரியும் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. வாரியத்தில் மாநிலத்திற்கு ஒரு உறுப்பினர் இருப்பார்.

வாரியம் ஒழுங்காக செயல்படும்போது உறுப்பினர்களின் கருத்தை ஏற்று நடக்க வேண்டும் என்பதுதான் விதி. அப்போது தமிழக அரசு சார்பில் கருத்தை ஆழமாக பதியவைத்து அணைகட்டும் முயற்சியை தடுத்து நிறுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

.