பெட்டிகள் பிரிந்தது தெரியாமல் 10 கி.மீக்கு தனியாக சென்ற ரயில் இன்ஜின்!

ரயில் இன்ஜினுக்கும் பெட்டிகளுக்குமான இணைப்பு சங்கிலி அறுந்ததை தொடர்ந்து, பெட்டிகள் இல்லாமல் ரயில் இன்ஜின் மட்டும் தனியாக பயணம் செய்துள்ளது.

பெட்டிகள் பிரிந்தது தெரியாமல் 10 கி.மீக்கு தனியாக சென்ற ரயில் இன்ஜின்!

புவனேஷ்வரில் இருந்து செகந்தராபாத் செல்லும் விசாகா எக்ஸ்பிரஸூக்கு சொந்தமானது அந்த இன்ஜின்.

Visakhapatnam:

ஆந்திர பிரதேசத்ததில் ரயிலின் பெட்டிகள் பிரிந்தது தெரியாமல் இன்ஜின் மட்டும் 10 கி.மீக்கு தனியாக சென்றதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். 

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் இருந்து ஆந்திராவின் செகந்தரபாத் வரை செல்லும் விசாகா விரைவு ரயில் பயணிகளுடன் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. ஆந்திர மாநிலம் நர்சிபட்டணம் மற்றும் துனி ரயில் நிலையங்களுக்கு இடையே, இந்த ரயில் வந்துகொண்டிருந்தபோது, ரயில் இன்ஜினுக்கும் பெட்டிகளுக்குமான இணைப்பு சங்கிலி அறுந்துள்ளது. 

இதைத்தொடர்ந்து, ரயிலின் இன்ஜின் மட்டும் திடீரென தனியே பிரிந்து 10 கிலோ மீட்டர் வரை சென்றுள்ளது. இதையடுத்து, பயணிகள் ரயில்வே அதிகாரிகளுக்கு சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த சம்பவத்தில் பயணிகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இந்த சம்பவத்தால், அந்த வழியில் செல்லும் அடுத்தடுத்த ரயில்கள் அனைத்தும் தாமதமடைந்துள்ளன. தொடர்ந்து, ரயில் பெட்டிகளுடன் இணைக்கப்பட்ட இன்ஜின், ஓடும் வேகத்தில் எப்படி தனியே பிரிந்து சென்றது என்பது குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ரயில் பெட்டியை விட்டு இன்ஜின் தனியாக சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் அதனை வீடியோ, புகைப்படமும் எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். 

(With Inputs From ANI)

More News