This Article is From Apr 18, 2020

ஒரு நாய் ஹெலிகாப்ட்டராக மாறினால் என்ன நடக்கும்… இதுதான் நடக்கும்! #ViralVideo

4 அடி உயரமுள்ள ஒரு கேட்டை மால்டுவின், ஹெலிகாப்ட்டரின் றெக்கைச் சுற்றுவது போல் தன் வாலைச் சுற்றி வெடுக்கெனத் தாவி குதித்தது.

ஒரு நாய் ஹெலிகாப்ட்டராக மாறினால் என்ன நடக்கும்… இதுதான் நடக்கும்! #ViralVideo

பார்க்க கியூட்டாக இருக்கும் இந்த சம்பவத்தை பக்காவாக வீடியோ எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஹெலன். 

தொடர்ந்து வீட்டிலேயே இருந்து மனச்சோர்வு ஏற்பட்டுவிட்டதா. அப்படியென்றால், இந்த வீடியோ உங்களுக்குத்தான். நமக்குத்தான் இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு, கட்டுப்பாடுகள் எல்லாம்… ஆனால் செல்லப் பிராணிகள் தங்களுக்குக் கிடைக்கும் இடத்தில் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்று காட்டிவிடும். அப்படியொரு சுட்டித்தனமான நாயின் வீடியோதான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

ஆஸ்திரேலியாவின் வேல்ஸ் பகுதியில் வசித்து வருபவர் ஹெலன் லாரா மோரே. அவர் மால்டுவின், டாரோ மற்றும் ஸ்கை என்னும் நாய்களை வளர்த்து வருகிறார். அதில் மால்டுவின் சுட்டி ஆனால் கெட்டி. தன் நாய்களை எப்போதும் போல ஒரு வாக்கிங் கூட்டிச் சென்றுள்ளார் ஹெலன்.

அப்போது 4 அடி உயரமுள்ள ஒரு கேட்டை மால்டுவின், ஹெலிகாப்ட்டரின் றெக்கைச் சுற்றுவது போல் தன் வாலைச் சுற்றி வெடுக்கெனத் தாவி குதித்தது. பார்க்க கியூட்டாக இருக்கும் இந்த சம்பவத்தை பக்காவாக வீடியோ எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஹெலன். 

இந்த சம்பவம் குறித்து ஹெலன், டெய்லி மெயில் செய்தி நிறுவனத்திற்கு, “இதைப் போன்ற மிகக் கஷ்டமான காலத்திலும் எனது செல்லப் பிராணிகளை வெளியில் அழைத்துச் செல்ல இடமிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அப்படி வாக்கிங் அழைத்துச் சென்ற போதுதான், மால்டுவின் திடீரென்று ஹெலிகாப்ட்டராக மாறிவிட்டது,” என்று புன்னகைக்கிறார். 

ட்விட்டரிலும் மால்டுவினின் வீடியோ பகிரப்பட்டு, கிட்டத்தட்ட 70 லட்சம் பார்வைகளை அள்ளியுள்ளது. வீடியோவைப் பார்க்க:

இந்த வீடியோவை 65,000-க்கும் அதிகமானோர் ரீ-ட்வீட் செய்துள்ளனர். பலரும் ஆச்சரியத்தில் கருத்திட்டு வருகின்றனர்.  

Click for more trending news


.