குவாரன்டீன் சென்டரில் கிரிக்கெட்… வைரலாகும் வீடியோ! - இப்படியும் டைம் பாஸ் பண்ணலாம்

இந்த வீடியோவுக்கு சிலர் ஆதரவு தெரிவித்திருந்தாலும், குவாரன்டீன் சமயத்தில் இப்படி விளையாடுவது கொரோனா தொற்றுக்கு வழிவகுக்காதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

குவாரன்டீன் சென்டரில் கிரிக்கெட்… வைரலாகும் வீடியோ! - இப்படியும் டைம் பாஸ் பண்ணலாம்

வீடியோவுடன் அப்துல்லா, ‘இடம் இருந்தால் விளையாடுவோம். இதுதான் குவாரன்டீன் டைம் பாஸ்,’ என்று கருத்து பதிவிட்டுள்ளார். 

ஜம்மூ காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, குவாரன்டீன் மையத்தில் சிலர் கிரிக்கெட் விளையாடும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். கிடைக்கும் இடத்தில் தங்களை முடிந்தவரை பிஸியாக வைத்திருக்கும் அந்த நபர்களின் செயலைப் பாராட்டும் வகையில் அவர் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். 37 நொடிகளே ஓடும் அந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை. 

வீடியோவுடன் அப்துல்லா, ‘இடம் இருந்தால் விளையாடுவோம். இதுதான் குவாரன்டீன் டைம் பாஸ்,' என்று கருத்து பதிவிட்டுள்ளார். 

வீடியோவில் ஒரு சிறிய கிரிக்கெட் மேட்ச் நடப்பது முதலில் காட்டப்படுகிறது. பின்னர் கேமரா அப்படியே அறையின் இன்னொரு பக்கத்திற்குத் திருப்பப்படுகிறது. படுக்கைகளில் நிறைய பேர் அமர்ந்திருக்கிறார்கள். அப்போதுதான் அது ஒரு குவாரன்டீன் மையம் என்பது தெரிகிறது. 

வீடியோவைப் பார்க்க:
 

இந்த வீடியோவுக்கு சிலர் ஆதரவு தெரிவித்திருந்தாலும், குவாரன்டீன் சமயத்தில் இப்படி விளையாடுவது கொரோனா தொற்றுக்கு வழிவகுக்காதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்கள். சிலரின் ரியாக்ஷன்கள் இதோ. 

கடந்த மாதம் இந்தியாவில் மீண்டும் உள்ளூர் விமான சேவை தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜம்மூ காஷ்மீர் நிர்வாகம், தங்கள் மாநிலத்துக்கு விமானம் மூலம் யார் வந்தாலும், அவர்களுக்கு கொரோனா வைரஸ் சோதனை செய்யப்படும் என்று தெரிவித்தது. சோதனை முடிவுகள் வரும் வரை அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் கூறியது. அதிகபட்சம் 24 மணி நேரத்தில் சோதனை முடிவுகள் வந்துவிடும் என்றும், நெகட்டிவ் என்று சோதனை முடிவுகள் வந்துவிட்டால் பயணிகள் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

Click for more trending news