This Article is From May 15, 2020

வேட்டையாடியான காட்டு நாயை அலறவிட்ட புலி - காணக்கிடைக்காத வீடியோ!

காட்டு நாய்கள், ஒரு வித விசில் சத்தத்தின் மூலம் மற்ற காட்டு நாய்களுடன் தொடர்பு கொள்ளும்.

வேட்டையாடியான காட்டு நாயை அலறவிட்ட புலி - காணக்கிடைக்காத வீடியோ!

காட்டு நாயின் வினோதமான நடவடிக்கைக்கு என்ன காரணம் என்பது குறித்து ஆன்லைனில் பலரும் பல்வேறு விளக்கங்களைக் கொடுத்த வண்ணம் உள்ளனர். 

கர்நாடகாவின் கபினியில் புலி ஒன்று, காட்டு நாயைத் துறக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளன. காரணம் காட்டு நாய் எனப்படும் Dhole இயற்கையாக ஒரு வேட்டையாடி வாழும் விலங்கு. அழிவின் விளிம்பில் உள்ள இந்த விலங்கு கூட்டமாக சேர்ந்து வேட்டையாடும் பழக்கம் கொண்டவை. அப்படிப்பட்ட காட்டு நாயை ஒரு புலி அலறவிடுவது குறித்தான வீடியோ காட்டுயிர் ஆர்வலர்களின் புருவங்களை உயர்த்தியுள்ளன. 

மனோ என்னும் காட்டுயிர் புகைப்படக் கலைஞர், இத குறித்தான வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்தார். அவர் மேலும், “ஒரு காட்டு நாய், இப்படி பயந்து சத்தமிடுவதை நான் பார்த்தது இல்லை. காரணம் அவைகளே வேட்டையாடி வாழும் விலங்குகள்தான். இந்தப் புலி அந்த நாயை ஓடவிட்டுள்ளது. அதன் சத்தத்தைக் கேளுங்கள். வித்தியாசமாக உள்ளது,” என்று வீடியோவுடன் பதிவையும் இட்டுள்ளார். 

வீடியோவைப் பார்க்க:

இந்த வீடியோ ஆன்லைனில் பகிரப்பட்டதிலிருந்து பல்லாயிரம் பார்வைகளையும் கருத்துகளையும் பெற்று வருகின்றன. 

காட்டு நாயின் வினோதமான நடவடிக்கைக்கு என்ன காரணம் என்பது குறித்து ஆன்லைனில் பலரும் பல்வேறு விளக்கங்களைக் கொடுத்த வண்ணம் உள்ளனர். 

காட்டு நாய்கள், ஒரு வித விசில் சத்தத்தின் மூலம் மற்ற காட்டு நாய்களுடன் தொடர்பு கொள்ளும். விசில் சத்தத்தைத் தவிர டப் டப் ஓசை, மிக அதிக பிட்ச் கொண்ட கத்தல் உள்ளிட்ட சத்தங்கள் போட்டும் மற்ற சகாக்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் காட்டு நாய்கள். இதைப் போன்ற ஒரு யுக்தி வேறு எந்த மிருகத்துக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Click for more trending news


.