This Article is From Jun 12, 2020

உலகமே வியந்து பாராட்டும் துள்ளல் நடனம்… அசத்திய ராஜஸ்தான் டான்சர்ஸ்… வேற லெவல் வைரல் வீடியோ!!

‘இந்தியாவில்தான் உலகின் மிகச் சிறந்த நடனக் கலைஞர்கள் உள்ளனர்’

உலகமே வியந்து பாராட்டும் துள்ளல் நடனம்… அசத்திய ராஜஸ்தான் டான்சர்ஸ்… வேற லெவல் வைரல் வீடியோ!!

இதுவரை பல லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ள இந்த வீடியோ, பல்லாயிரம் லைக்ஸ்களையும் குவித்து வருகின்றன.

உலக அளவில் பிரபலமான சில டிவி ஷோக்களில் அமெரிக்கா'ஸ் காட் டேலன்ட் (AGT) நிகழ்ச்சியும் ஒன்று. உலகெங்கிலும் இருந்து வரும் பல்வேறு கலைஞர்கள் தங்களது கலையை அரங்கேற்றும் இடம்தான் ஏஜிடி. அதில் சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஷகிர் மற்றும் ரிகான் ஆகிய உறவினர்கள் தங்கள் நடனத்தால் பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளனர். அவர்கள் நடனமாடிய வீடீயோ, தற்போது யூடியூபில் பதிவேற்றப்பட்டு அங்கு வைரலாக மாறி வருகிறது. அங்கு மட்டும் வீடியோ நின்று விடாமல், சமூக வலைதளங்களிலும் தற்போது படுவேகமாக பரவி வருகிறது. 

வீடியோவில் 9 வயதாகும் ரிகான் மற்றும் 21 வயதாகும் அவரின் உறவினர் ஷகிர் ‘பிரதர்' என்கிற பாட்டுக்கு பறந்து பறந்து டான்ஸ் ஆடுகின்றனர். ஒரு இடத்தில் கூட பிசிறு தட்டாமல் அவர்கள் நிகழ்த்திக் காட்டிய சாகசம் முடிந்த பின்னர், ஏஜிடி நடுவர்கள் எழுந்து நின்று கைதட்டினர். நிகழ்ச்சியை நேரில் கண்ட ரசிகர்களும் நடன ஜோடிக்கு ஆரவாரம் எழுப்பி உற்சாகப்படுத்தினர்.

ரிகான் மற்றும் ஷகிரின் நடன வீடியோவைப் பார்க்க:

இதுவரை பல லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ள இந்த வீடியோ, பல்லாயிரம் லைக்ஸ்களையும் குவித்து வருகின்றன.

வீடியோவுக்கு கீழ் ஒருவர், ‘இந்த ஏஜிடி சீசனின் மிக பெஸ்ட் அரங்கேற்றம் இதுவே. இந்த இருவரும் இந்த சீசனுக்கான பட்டத்தை வெல்ல அதிக வாய்ப்புள்ளது. இந்த சீசனின் வேறு எந்த மிகச் சிறந்த அரங்கேற்றம் வரவில்லை என்றால், இவர்கள்தான் வெல்லப் போகிறார்கள். நானும் இவர்களுக்கே ஆதரவு அளிப்பேன்,' என்கின்றார். 

இன்னொருவர், ‘இந்தியாவில்தான் உலகின் மிகச் சிறந்த நடனக் கலைஞர்கள் உள்ளனர்' என்று புகழாரம் சூட்டுகிறார். 

Click for more trending news


.