This Article is From Jan 10, 2020

வாரணாசியைச் சேர்ந்தவர் உருவாக்கிய ‘லிப்ஸ்டிக் துப்பாக்கி’

லிப்ஸ்டிக் துப்பாக்கியை சார்ஜ் செய்து கொள்ளலாம். புளூ டூத் மூலம் மொபைலுடன் இணைத்துக் கொள்ளலாம்

வாரணாசியைச் சேர்ந்தவர் உருவாக்கிய ‘லிப்ஸ்டிக் துப்பாக்கி’

சுமார் ரூ. 600 செலவாகும் கேஜெட்டை தயாரிக்க அவருக்கு ஒரு மாதம் பிடித்தது (Representative Image)

உத்தர பிரதேசத்தில் வாராணசியைச் சேர்ந்த ஒருவர் பெண்களுக்கான புதிய தனிப்பட்ட பாதுகாப்பு கேஜெட்டை உருவாக்கியுள்ளார்.

ஷியாம் சவுராசிய என்ற விஞ்ஞானி ‘லிப்ஸ்டிக் துப்பாக்கியை' உருவாக்கியுள்ளார். இது துப்பாக்கி வெடிப்பது போன்ற ஒலியை எழுப்புவதுடன். அவசர எண் 112க்கு எமர்ஜென்சி சிக்னலையும் அனுப்புகிறது. 

ஷியாம் சாதாரண லிப்ஸ்டிக்கில் கூடுதலாக சாக்கெட் பொருத்தப்பட்டுள்ளதாக கூறுகிறார்.

“ஒரு பெண் இக்கட்டான சூழலில் சிக்கினால், அவர் லிப்ஸ்டிக்கில் பொருத்தப்பட்ட பட்டனை அழுத்தினால் போதும், துப்பாக்கி சூடு போன்ற வெடிப்பு ஒலி கேட்பதுடன் 112க்கு செய்தியை அனுப்பும். இதை சுமந்து செல்வது எளிது. ஏனெனில் அது பொருத்தப்பட்டிருக்கும் சாதாராண உதட்டு சாயம் எந்த சந்தேகத்தையும் எழுப்பாது” என்று அவர் கூறினார்.

லிப்ஸ்டிக் துப்பாக்கியை சார்ஜ் செய்து  கொள்ளலாம். புளூ டூத் மூலம் மொபைலுடன் இணைத்துக் கொள்ளலாம்

சுமார் ரூ. 600 செலவாகும் கேஜெட்டை தயாரிக்க அவருக்கு ஒரு மாதம் பிடித்தது என்று ஷியாம் கூறுகிறார்.இந்த சாதனத்திற்கான காப்புரிமையை பெறவும் திட்டமிட்டுள்ளார்.

கேஜெட்டைப் பயன்படுத்திய பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவி ஷெபாலி ராய் “எடுத்து செல்வது வசதியாக உள்ளது. வெடிப்பு ஒலி பயத்தை உருவாக்குகிறது. நீங்கள் அதை வெளியே எடுக்கும்போது உதட்டுச்சாயம் போல் இருப்பதால் யாரும் சந்தேகிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)Click for more trending news


.