மாநிலங்களவை எம்.பி-யாக தமிழில் பதவியேற்ற வைகோ… உறுதிமொழியில் என்ன சொன்னார்..?

முன்னதாக, தேசத் துரோக வழக்கில் தீர்ப்பு வந்தததைத் தொடர்ந்து, வைகோ ராஜ்யசபா எம்.பி சீட்டிற்குப் போட்டியிடுவதில் சிக்கல் இருக்கும் எனப்பட்டது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
மாநிலங்களவை எம்.பி-யாக தமிழில் பதவியேற்ற வைகோ… உறுதிமொழியில் என்ன சொன்னார்..?

 15 ஆண்டுகள் கழித்து நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் வைகோ. 


மதிமுக பொதுச் செயலாளரான வைகோ, சுமார் 15 ஆண்டுகள் கழித்து திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று மாநிலங்களவையில் எம்.பி-யாக பதவியேற்றுக் கொண்டார். 

நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற வைகோ, ‘மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் வைகோ என்னும் நான், சட்டத்தினால் நிறுவு பெற்றதான இந்திய அரசியல் சட்டசாசனத்தின் மீது உண்மையான பற்றார்வமும், பற்றுருதியும் கொண்டிருப்பேன் என்றும், இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் உறுதியாக பற்றி நிற்பேன் என்றும், நான் இப்போது ஏற்க இருக்கும் கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் விழுமிய முறைமையுடன் உறுதி கூறுகிறேன்' என்று தமிழில் உறுதிமொழி ஏற்றார். 

முன்னதாக, தேசத் துரோக வழக்கில் தீர்ப்பு வந்தததைத் தொடர்ந்து, வைகோ ராஜ்யசபா எம்.பி சீட்டிற்குப் போட்டியிடுவதில் சிக்கல் இருக்கும் எனப்பட்டது. ஆனால், கடைசியில் தேர்தல் ஆணையம், அவருக்கு எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. இதனால், 15 ஆண்டுகள் கழித்து நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் வைகோ. 

இதற்கு முன்னர் வைகோ, திமுக சார்பில் ராஜ்யசபாவிற்கு 3 முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1999 முதல் 2004 வரை அவர் சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று லோக்சபா உறுப்பினராக இருந்தார் வைகோ.


 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................