குழு அமைத்து கேரளாவுக்கு உதவ முன் வந்துள்ளது ஐக்கிய அரபு அமீரகம்

வரலாற்றில் இல்லாத அளவு மோசமான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு உதவ இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது

 Share
EMAIL
PRINT
COMMENTS
குழு அமைத்து கேரளாவுக்கு உதவ முன் வந்துள்ளது ஐக்கிய அரபு அமீரகம்
Kochi: 

வரலாற்றில் இல்லாத அளவு மோசமான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு உதவ இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. கமிட்டி ஒன்றை உருவாக்கி வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவி அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃபா, தேசிய அவசரகால கமிட்டியை உருவாக்கி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளதாக, ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

அந்நாட்டின் துணை அதிபர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மகோத்தும், கேரளாவுக்கு உதவி செய்ய வேண்டியது எங்கள் கடமை என்று கூறியுள்ளார். கேரளாவைச் சேர்ந்த பலர் ஐக்கிய அரபு நாடுகளில் காலங்காலமாக பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“எங்கள் வெற்றிப் பயணத்தில், கேரளாவைச் சேர்ந்த மக்கள் எப்போதும் பங்காற்றியுள்ளார்கள்” என்று தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார் துணை அதிபர்.

324 பேரை பலி கொண்ட மழை வெள்ளத்தில் இதுவரை, 3 லட்சத்துக்கு மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 30 ராணுவ ஹெலிகாப்டர்களும், 320 படகுகளும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இன்று காலை பாதிப்புகளை வான் வழி மார்க்கமாக பார்வையிட்ட பிரதமர் மோடி, 500 கோடி ரூபாய் உடனடி நிதி உதவி அறிவித்துள்ளார்.லோக்சபா தேர்தல் 2019 – யின் சமீபத்திய தேர்தல் செய்திகள், லைவ் அப்டேட்ஸ் மற்றும் தேர்தல் அட்டவணையை ndtv.com/tamil/elections –யில் பெறுங்கள். 2019 பொது தேர்தலின் 543 தொகுதிகள் அப்டேட்களை பெற Facebook மற்றும் Twitter பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................