This Article is From Jul 02, 2018

ரயில் நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் 2 பெண் கைக்குழந்தைகள் கண்டெடுப்பு

இரயில்வே காவல்துறையினரால் மீட்கப்பட்ட ஒரு வயது, மற்றும் இரண்டு வயதுடைய பெண் குழந்தைகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

ரயில் நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் 2 பெண் கைக்குழந்தைகள் கண்டெடுப்பு
Muzaffarnagar:

முசாஃபர்நகர்: உத்தர பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் ரயில் நிலையத்தில், கைவிடப்பட்ட இரண்டு பெண் கைக்குழந்தைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இரயில்வே காவல்துறையினரால் மீட்கப்பட்ட ஒரு வயது, மற்றும் இரண்டு வயதுடைய பெண் குழந்தைகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவர்கள் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக தலைமை மருத்துவர் பி.எஸ் மிஷ்ரா தெரிவித்தார்.

தற்போது, மாவட்ட குழந்தைகள் நல அமைப்பின் கண்காணிப்பில் குழந்தைகளை ஒப்படைத்துள்ளதாகவும், குழந்தைகளை விட்டுச்சென்றவர்கள் குறித்த தகவல்களை விசாரித்து வருவதாகவும் ரயில்வே காவல் துறை அதிகாரி அவதார் சிங் தெரிவித்தார்.

.