This Article is From Mar 18, 2019

தேர்தல் தேதி மாற்றியமைக்கப்பட வேண்டும்: தமிழ்நாடு திருநங்கை அமைப்பு கோரிக்கை

தேர்தல் நடை பெறும் நாளில் கூத்தாண்டவர் திருவிழா 3 நாள் நடைபெறுகிறது.

தேர்தல் தேதி மாற்றியமைக்கப்பட வேண்டும்: தமிழ்நாடு திருநங்கை அமைப்பு கோரிக்கை

கூவகம் கூத்தாண்டவர் விழாவில் 6.5 லட்சம் திருநங்கைகள் கலந்து கொள்வார்கள்.

Madurai:

தமிழகத்தில் திருநங்கை சமூகத்தினர் லோக் சபா தேர்தல் தேதிகளை மாற்றியமைக்க விரும்பி கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்தல் நடை பெறும் நாளில் கூத்தாண்டவர் திருவிழா 3 நாள் நடைபெறுகிறது. அந்த நாளில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பாலானவர்களால்  வாக்களிக்க வர முடியாது என்று  திருநங்கை ஆர்வலர், பாரதி கண்ணம்மா  தெரிவித்துள்ளார். 

மதுரையில் திருநங்கைகளின் பிரதிநிதிகள் மாவாட்ட கலெக்டர் எஸ். நடராஜனுக்கு ஒரு கடிதத்தில் வேண்டுகோள் விடுத்தனர். ஏப்ரல் 18-ம் தேதி தமிழகமெங்கும் ஒரே கட்டமாக  நடக்கவுள்ள தேர்தலை மாற்றியமைக்கும் படி கோரியுள்ளனர். இரண்டு காரணங்களுக்காக நாங்கள் தேர்தல் தேதியை தள்ளிவைக்க வேண்டுகிறோம். ஒன்று மதுரை அழகர் கோயில் திருவிழா நடக்கவுள்ளது. மற்றொன்று விழுப்புரத்தில் உள்ள கூவகம் திருவிழா ஏப்ரல் 15- 17 வரை  நடை பெறவுள்ள நிலையில் வாக்களிப்பு சதவீதம் குறையலாம், இதனால் தேர்தல் நடைபெறும் நாளை மாற்றியமைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். 

கூவகம் கூத்தாண்டவர் விழாவில் 6.5 லட்சம் திருநங்கைகள் கலந்து கொள்வார்கள். அவர்களின் பிரதிநிதித்துவம் புறக்கணிக்கப்படும் என்று தன் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார் பாரதி கண்ணம்மா. 

ஏப்ரல் 8 முதல் 22 வரை சித்திரை திருவிழா நடைபெறுவதால் தேர்தல் தேதி மாற்றி வைக்கப்பட வேண்டும் என்று அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் கோரிக்கை வைத்துள்ளனர். மார்ச் 14 ம் தேதி தமிழ்நாடு பிஷப் கவின்சில்  மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியது. 

அதில் கிறித்துவ சமுதாய மக்களின் முக்கிய நிகழ்வான பெரிய வியாழன் விழா உள்ளதால் தேர்தல் தேதி மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். தேர்தல் ஆணையம் லோக் சபா தேர்தலை 7 கட்டமாக நடத்தவுள்ளது. ஏப்ரல்11, ஏப்ரல் 18, ஏப்ரல் 23, ஏப்ரல் 29, மே 6, மே 12 மற்றும் மே19 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. ஓட்டு எண்ணிக்கை மே 23 அன்று நடைபெறவுள்ளது. 

.