This Article is From Aug 07, 2020

’ஆபாசத்தை பரப்பும் செயல்’: ரெஹானாவின் அரை நிர்வாண வீடியோ குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து!

வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுபோன்ற செயல்பாடுகளிலிருந்து வளரும் குழந்தைகளுக்கு என்ன நன்மை கிடைக்கும் என கேள்வி எழுப்பினர். 

’ஆபாசத்தை பரப்பும் செயல்’: ரெஹானாவின் அரை நிர்வாண வீடியோ குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து!

’ஆபாசத்தை பரப்பும் செயல்’: ரெஹானாவின் அரை நிர்வாண வீடியோ குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து!(File)

New Delhi:

கேரளாவில் சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா தனது அரை நிர்வாண உடலில் அவரது குழந்தைகள் ஓவியம் வரையும் சர்ச்சை வீடியோ தொடர்பான வழக்கில் தான் கைதாகாமல் இருக்க முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. 

உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான மூன்று நபர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுபோன்ற செயல்பாடுகளிலிருந்து வளரும் குழந்தைகளுக்கு என்ன நன்மை கிடைக்கும் என கேள்வி எழுப்பினர். 

இது ஆபாசத்தை பரப்பும் செயல். நீங்கள் இதையெல்லாம் ஏன் செய்கிறீர்கள்? நீங்கள் ஒரு சமூக ஆர்வலராக இருக்கலாம், ஆனால் இது என்ன வகையான முட்டாள்தனம்? ஆபாசத்தையே நீங்கள் பரப்புகிறீர்கள். இது சமூகத்தில் மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருத்து தெரிவித்தனர். 

சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்ட சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா மீது போக்சோ சட்டத்தின் கீழும், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழும் போலீசாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வீடியோ தொடர்பாக ரெஹானா தரப்பில், பெண்களின் உடலைப் பற்றிய விழிப்புணர்வை வீட்டிலிருந்தே கற்றுக் கொடுத்தால்தான் இந்த சமூகம் மாறும். இதனால் குழந்தைகள் பெண்களின் உடலை அவமதிக்காது என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 செப்டம்பரில் அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். 

கேரளாவில் உள்ள கடவுள் சிலைகளிலும், சுவரோவியங்களிலும் வெறும் மார்பகங்களுடன் இருப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளன. கோயிலில் ஒருவர் தரிசனம் செய்யும் போது, அந்த உணர்வு பாலியல் தூண்டுதலை ஏற்படுத்தாது, ஆனால் தெய்வீகத்தன்மையில் ஒன்றாக இருக்கும் "என்று உச்ச நீதிமன்றத்தில் அளித்த மனுவில் பாத்திமா கூறியிருந்தார்.

பெண்களின் நிர்வாணம் ஆபாசமாக இருக்கிறதா? தாயின் உடலில் குழந்தைகள் ஓவியம் வரைந்தது இந்த கடுமையான சட்டங்களின் கீழ் பாலியல் திருப்தி "மற்றும்" குழந்தை துஷ்பிரயோகம் "என்று முடிவு செய்ய முடியுமா?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

கொச்சியில் உள்ள ரெஹானா பாத்திமா வீட்டில் சோதனை நடத்திய போலீசார் அவரது லேப்டாப், மொபைல் போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து சென்றதை தொடர்ந்து, முன்ஜாமின் கோரி அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

With input from ANI, PTI

.