This Article is From Dec 07, 2019

TNPSC : தமிழ்நாடு சிவில் நீதிபதிகள் தேர்வு முடிவு ஜனவரியில் வெளியாகிறது!!

TNPSC Civil Judge முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். முதன்மைத் தேர்வு 2020 மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

TNPSC : தமிழ்நாடு சிவில் நீதிபதிகள் தேர்வு முடிவு ஜனவரியில் வெளியாகிறது!!

மொத்தம் 176 சிவில் நீதிபதிகள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

ஹைலைட்ஸ்

  • முதல்நிலை, முதன்மை என 2 எழுத்து தேர்வுகள் நடைபெறுகின்றன
  • ஜனவரியில் முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
  • மார்ச் மாதம் முதன்மைத் தேர்வுகள் நடைபெறவுள்ளன
New Delhi:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய TNPSC Civil Judge முதல்நிலை தேர்வு முடிவுகள் ஜனவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்வு கடந்த நவம்பர் 24-ம்தேதி நடத்தப்பட்டது. 

TNPSC வெளியிட்டுள்ள தேர்வு கால அட்டவணையின்படி, தேர்வு முடிவு ஜனவரி 2020-ல் வெளியாகலாம். இந்த தேர்வின் வழியாக மொத்தம் தமிழகத்தில் 176 சிவில் நீதிபதி காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக முதன்மைத் தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். TNPSC Civil Judge முதன்மைத் தேர்வு 2020 மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன. 

முதல்நிலைத் தேர்வை பலர் எழுதினாலும், மொத்தம் 176 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் அதன் 10 மடங்கான, 1,760 என்ற எண்ணிக்கைக்கு மிகாமல் முதன்மைத் தேர்வு எழுத தேர்வர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த தகவலை TNPSC தெரிவித்துள்ளது. 

முதன்மைத் தேர்வில் பெற்ற மதிப்பெண், நேர்முகத் தேர்வு மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண்கள் தரவரிசைப்படுத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இதன் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும். 

முதன்மைத் தேர்வில், வாதங்களை மொழிமாற்றும் திறமை, வழக்கின் முக்கிய அம்சங்கள், உத்தரவுகள், தீர்ப்புகள், ஆங்கிலத்தில் உள்ள ஆவணங்கள் உள்ளிட்டவற்றை தமிழிலும், தமிழில் உள்ளவற்றை ஆங்கிலத்திலும் மொழிமாற்றம் செய்யும் திறமை சோதிக்கப்படும். 

தேர்வில் மொத்தம் 3 தாள்கள் உள்ளன. இந்த தேர்வு சென்னையில் மட்டுமே நடைபெறும். மொத்த மதிப்பெண்கள் 400.
 

Click here for more Jobs News

.