This Article is From Nov 28, 2018

‘ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு!’- தீர்ப்பாயத்தில் ஆய்வுக் குழு தகவல்

ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நிறுவனம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது

‘ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு!’- தீர்ப்பாயத்தில் ஆய்வுக் குழு தகவல்

ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நிறுவனம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலை குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் செய்யப்பட்ட ஆய்வு குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், ‘தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு' என்று சுட்டிக்காட்டியுள்ளது. இதையடுத்து தீர்ப்பாயம் தமிழக அரசை, ஒரு வாரத்தில் அறிக்கை குறித்து பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு மீண்டும், டிசம்பர் 7 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தீர்ப்பாயம் கூறியுள்ளது.

தீர்ப்பு வந்ததை அடுத்து, ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர், ஆரியமா சுந்தரம், ‘தருண் அகர்வாலா தலைமையிலான மூவர் குழு, சமர்பிக்கப்பட்ட அறிக்கையில், நீர் மற்றும் காற்று குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். கழிவுகளை எப்படி வெளியேற்றுவது என்பது குறித்தும் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், இறுதியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடியதை தவறு என்று தான் சொல்லப்பட்டிருக்கிறது.

இது குறித்து ஸ்டெர்லைட் ஆலை தரப்பிடமும் தமிழக அரசிடமும் நீதிமன்றம் பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்டெர்லைட் தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பப்படாமலேயே ஆலை மூடப்பட்டள்ளது குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரியத்துக்கும் பல வழிகாட்டுதல்களை ஆய்வுக் குழு சொல்லியுள்ளது. எங்களுக்கு சாதகமாகத்தான் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.

.