This Article is From May 25, 2020

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி!

"இன்று மாலை ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்"

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி!

"மாஸ்டர் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள அவர் வந்திருந்தார். இன்று காலை ஒரு மருத்துவக் குழு அவரின் சோதனை முடிவுகளை ஆராய்ந்தது."

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், நேற்று மாலை சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சென்னை, அமைந்தகரை பகுதியில் அமைந்துள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில்தான் ஓபிஎஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை, “தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், 24-05-2020 அன்று மாலை எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனைக்கு வந்திருந்தார். மாஸ்டர் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள அவர் வந்திருந்தார். இன்று காலை ஒரு மருத்துவக் குழு அவரின் சோதனை முடிவுகளை ஆராய்ந்தது. 

இதையடுத்து, இன்று மாலை ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்,” என்று தெரிவித்துள்ளது. 

8vfelbp8

.