This Article is From Aug 24, 2020

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

ஹைலைட்ஸ்

  • ஒட்டு மொத்த உயிரிழப்பு 6,614 ஆக அதிகரித்துள்ளது
  • தற்போது 53,282 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • இதுவரை சென்னையில் மட்டும் 2,603 பேர் உயிரிழந்துள்ளனர்

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3.85 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 70,023 மாதிரிகளில் 5,967 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 26வது நாளாக தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் குறைவாக தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. தற்போது ஒட்டு மொத்த பாதிப்பு 3,85,352 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 6,129 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 3,25,456 ஆக அதிகரித்துள்ளது. இன்று 97 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கடந்த சில நாட்களாக 100க்கும் அதிகமாக உயிரிழப்பு பதிவாகியுள்ள நிலையில் தற்போது உயிரிழப்பு 100க்கும் குறைவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 6,614 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 53,282 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,967 நபர்களில் 1,278 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,26,677 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,603 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம் 

அரியலூர் - 52

செங்கல்பட்டு - 306

சென்னை -1,278

கோவை - 387

கடலூர் - 370

தர்மபுரி - 8

திண்டுக்கல் - 132

ஈரோடு -189

கள்ளக்குறிச்சி - 56

காஞ்சிபுரம் - 226

கன்னியாகுமரி - 149

கரூர் - 23

கிருஷ்ணகிரி - 61

மதுரை - 74

நாகை - 63

நாமக்கல் - 59

நீலகிரி -75

பெரம்பலூர் -26

புதுக்கோட்டை - 187

ராமநாதபுரம் - 30

ராணிப்பேட்டை - 121

சேலம் - 273

சிவகங்கை - 47

தென்காசி - 94

தஞ்சை - 119

தேனி - 193

திருப்பத்தூர் - 56

திருவள்ளூர் - 320

திருவண்ணாமலை - 145

திருவாரூர் - 111

தூத்துக்குடி - 98

திருநெல்வேலி - 77

திருப்பூர் - 76

 திருச்சி - 104

வேலூர் - 159

விழுப்புரம் - 156

விருதுநகர் - 56

மாவட்ட வாரியாக உள்ள மொத்த ஆக்டிவ் கேஸ்கள் விவரம்:

அரியலூர் - 2,280

செங்கல்பட்டு - 23,806

சென்னை - 1,26,677

கோவை - 12,141

கடலூர் - 9,155

தர்மபுரி - 1,141

திண்டுக்கல் - 5,869

ஈரோடு - 2,252

கள்ளக்குறிச்சி - 5,441

காஞ்சிபுரம் - 15,742

கன்னியாகுமரி - 8,687

கரூர் - 1,322

கிருஷ்ணகிரி - 1,867

மதுரை - 13,508

நாகை - 1,954

நாமக்கல் - 1,615

நீலகிரி - 1,400

பெரம்பலூர் - 1,181

புதுக்கோட்டை - 5,256

ராமநாதபுரம் - 4,415

ராணிப்பேட்டை - 9,460

சேலம் - 8,214

சிவகங்கை - 3,783

தென்காசி - 4,840

தஞ்சை - 5,769

தேனி - 11,638

திருப்பத்தூர் - 2,578

திருவள்ளூர் - 22,759

திருவண்ணாமலை - 9,521

திருவாரூர் - 2,896

தூத்துக்குடி - 10,736

திருநெல்வேலி - 8,565

திருப்பூர் - 2,099

 திருச்சி - 6,764

வேலூர் - 9,715

விழுப்புரம் - 6,213

விருதுநகர் - 11,952

.