This Article is From Dec 09, 2018

மாற்றுதிறனாளிகளுக்காக உருவாக்கப்பட்ட பிரத்தியேக உணவகம்!

இந்த உணவகத்தை நாடுமுழுவதும் திறக்க முடிவெடுத்துள்ள நிர்வாகம் மாற்றுதிறனாளிகளை சக மனிதர்களாக நடத்துவது முக்கியம் என்றார்

மாற்றுதிறனாளிகளுக்காக உருவாக்கப்பட்ட பிரத்தியேக உணவகம்!
Jodhpur:

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூரில் ‘மாற்றுதிறனாளிகளுக்காக' பிரத்தேயக உணவகம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அங்கு பணிபுரிவோர் அனைவரும் மாற்றுதிறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘தீ பியுட்டி ஆப் சைலன்ஸ்' எனப்படும் இந்த உணவகத்தின் உரிமையாளர் திவாக்கர் ஆரோரா, தனது உணவகத்தில் உள்ள (சமைத்தல், உணவு பரிமாறுதல், சுத்தம்செய்தல் மற்றும் கணக்கை சரிபார்த்தல்) என அனைத்து பணிக்கும் மாற்றுதிறனாளிகளை பணியமர்த்தியுள்ளார்.

‘எங்களது முதல் நோக்கமே மாற்றுதிறனாளிகளுக்கும் மற்றவர்களும் ஒன்றுதான் என மக்களுக்கு புரிய வைப்பதுதான்.'

அங்கு பணிசெய்பவர்கள் அவர்களது இயலாமையும் மீறி சையின் மொழி மூலம் வரும் விருந்தினர்களை வரவேற்கின்றனர். இந்த உணவகத்தில் என்ன உணவு உன்ன வேண்டும் என்பதை நாம் முடிவு செய்துவிட்டு அதன்மேல் கை வைத்து காட்ட வேண்டும். மேலும் இங்கு, அடிக்கடி புதுப்புது உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு தந்து அசத்துவது இவர்களின் வழக்கம்.

அங்கிருந்த பணியாளர்களின் ஒருவரான ரமேஷ்ஷிடம் பேசியபோது அவர் கூறியது ‘ நான் இங்கு பணிக்கு சேர்ந்து நான்கு மாதங்களாகிவிட்டது, இதற்குமுன் வேலைபார்த்த இடத்தில் எனது குறைபாட்டிற்க்காக எனக்கு தனி கவனம் கிடைக்கும் ஆனால் இங்கு என்னை சமமாக பார்ப்பதுடன் என்னால் இங்குள்ள மற்றவர்களுடன் இணைந்து சந்தோஷமாக வேலைபார்க்க முடியும்' என கூறினார்.

மேலும் இந்த உணவகத்தை நாடுமுழுவதும் திறக்க முடிவெடுத்துள்ள நிர்வாகம் மாற்றுதிறனாளிகளை சக மனிதர்களாக நடத்துவது முக்கியம் என்றார்.

.