This Article is From Mar 07, 2019

வித்தியாச வடிவில் அறிமுகமாக உள்ளது புதிய ரூ.20 நாணயம்..!

ரூபாய் நோட்டுகள் போல் அல்லாமல், நாணயங்களின் வாழ்நாள் அதிகமாகும்.

வித்தியாச வடிவில் அறிமுகமாக உள்ளது புதிய ரூ.20 நாணயம்..!

சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்னர் 2009 மார்ச் மாதம்தான், முதன்முறையாக நிதி அமைச்சகம், 10 ரூபாய் நாணயத்தை வெளியிட்டது

ஹைலைட்ஸ்

  • 12 பக்கங்கள் கொண்ட வகையில் ரூ.20 நாணயம் இருக்கும்
  • 10 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ.10 நாணயம் அறிமுகம் செய்யப்பட்டது
  • கடந்த ஆண்டு ஆர்பிஐ, 'அனைத்து வித ரூ.10 நாணயமும் செல்லும்' என்றது
New Delhi:

இந்திய நிதி அமைச்சகம், சீக்கிரமே 20 ரூபாய் நாணயம் புழக்கத்தில் விடப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நாணயம் 12 பக்கங்கள் கொண்ட வித்தியாச உருவில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிதி அமைச்சகம் இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், 27 மி.மீ சுற்றளவு கொண்டதாக இருக்கும் இந்த புதிய 20 ரூபாய் நாணயத்தில், 2 வகை உலோகங்களை பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்னர் 2009 மார்ச் மாதம்தான், முதன்முறையாக நிதி அமைச்சகம், 10 ரூபாய் நாணயத்தை வெளியிட்டது. அப்போதிலிருந்து இதுவரை, 13 முறை 10 ரூபாய் நாணயத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளன. இப்படிச் செய்ததனால் மக்கள் குழப்பத்துக்கு உள்ளாகினர். 
 

0lr9su9

 

10 ரூபாய் நாணயத்தில் பல மாறுதல்கள் செய்யப்பட்டதால், கடைகளில் அந்த நாணயத்தை வாங்க மறுக்கிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளனர் மக்கள். 

இதையடுத்துதான் சென்ற ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி, 'புழக்கத்தில் இருக்கும் 14 வித 10 ரூபாய் நாணயமும் செல்லும்' என்று அறிவிப்பு வெளியிட்டது. 

ரூபாய் நோட்டுகள் போல் அல்லாமல், நாணயங்களின் வாழ்நாள் அதிகமாகும். இந்த காரணத்தால், அவை வெகு நாட்களுக்கு புழக்கத்தில் இருக்கும் எனப்படுகிறது. 
 

.