This Article is From Jul 31, 2018

ஆப்கானிஸ்தானில் 12 பேரை பிணைக்கைதிகளாக சிறை பிடித்த தீவிரவாதிகள்

ஆப்கானிஸ்தான் ஜாலாபாத் நகரில் உள்ள அரசு அலுவலகத்தில் புகுந்த தீவிரவாதிகள், 12 பேரை பிணைக்கைதிகளாக சிறை பிடித்துள்ளனர்

ஆப்கானிஸ்தானில் 12 பேரை பிணைக்கைதிகளாக சிறை பிடித்த தீவிரவாதிகள்
Jalalabad, Afghanistan:

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் ஜாலாபாத் நகரில் உள்ள அரசு அலுவலகத்தில் புகுந்த தீவிரவாதிகள், 12 பேரை பிணைக்கைதிகளாக சிறை பிடித்துள்ளனர்.

கடந்த செவ்வாய்கிழமை, திடீரென்று துப்பாக்கி ஏந்திய மூன்று தீவிரவாதிகள் ஜாலாபாத் அரசு அலுவலகத்திற்குள் நுழைந்தனர். கும்பலில் இருந்த ஒரு தீவிரவாதி, அலுவலகத்தின் நுழைவாயிலில் தற்கொலை குண்டு தாக்குதலை நிகழ்த்தினார். இதனால், பொது மக்கள் காயமடைந்துள்ளனர்

இந்த தாக்குதலை தொடர்ந்து, சில நிமிடங்களிலேயே நுழைவாயிலில் இருந்த கார் ஒன்று வெடித்து சிதறியுள்ளது. இதில் 8 பேர் காயமடைந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

அலுவலகத்திற்குள் நுழைந்த தீவிரவாதிகள். 12 பேரை பிணைக்கைதிகளாக சிறை பிடித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு தீவிரவாத குழுக்கள் பொறுப்பேற்காத நிலையில், இந்த தாக்குதலில் எங்களுக்கு சம்பந்தமில்லை என்று தாலிபான் அமைப்பினர் அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

கடந்த சில வாரங்களாகவே, ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைப்பெற்று வருகின்றன. ஃபரா பகுதியில் சாலையில் வைக்கப்பட்டிருந்த குண்டு மீது பேருந்து மோதியதில், 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.