டி சர்ட் மூலம் ஒருபோதும் தமிழை வளர்த்தெடுக்க முடியாது; வானதி சீனிவாசன்

திரையுலகத்தினர் சிலர், “நான் தமிழ் பேசும் இந்தியன்” என்றும் “இந்தி தெரியாது போடா” என்றும் வாசகங்கள் அடங்கிய டி-சர்டினை அணிந்திருந்தது தற்போது பெரும் வைரலாகி வருகின்றது. 

டி சர்ட் மூலம் ஒருபோதும் தமிழை வளர்த்தெடுக்க முடியாது; வானதி சீனிவாசன்

இந்தி தெரியாததால் டெல்லி விமான நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்டதாக இயக்குநர் வெற்றிமாறன் பேட்டி ஒன்றில் தெரிவித்தது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கனடா மான்ட்ரியல் திரைப்பட விழாவில் ஆடுகளம் படத்தை ஸ்கிரீன் செய்துவிட்டு இந்தியாவுக்கு திரும்பி வந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகவும் அவர் கூறியிருந்தார். 

இந்நிலையில் திரையுலகத்தினர் சிலர், “நான் தமிழ் பேசும் இந்தியன்” என்றும் “இந்தி தெரியாது போடா” என்றும் வாசகங்கள் அடங்கிய டி-சர்டினை அணிந்திருந்தது தற்போது பெரும் வைரலாகி வருகின்றது. 

இந்நிலையில் இது குறித்து தமிழக பாஜக நிர்வாகிகளுள் ஒருவரான வானதி சீனிவாசனிடம் கேள்வியெழுப்பியபோது, டி சர்ட் மூலம் ஒருபோதும் தமிழை வளர்த்தெடுக்க முடியாது என்றும் அதே போல ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழியில் கல்வி என்பதை அரசு நடைமுறைப்படுத்தினால் பாஜக வரவேற்கத் தயார் என்றும் அவர் கூறியுள்ள கருத்தானது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.