This Article is From May 19, 2020

கரையை நெருங்கும் ஆம்பன் புயல் :''இரட்டை சவாலை எதிர்கொள்ளும் இந்தியா"

ஏற்கனவே கொரோனா பாதிப்பு மேற்கு வங்கத்தில் கடுமையாக இருக்கிறது. இந்த சூழலில் ஆம்பன் புயல் முன்னெச்சரிக்கையாக கடலோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கரையை நெருங்கும் ஆம்பன் புயல் :''இரட்டை சவாலை எதிர்கொள்ளும் இந்தியா

நாளை மதியம் 180 கிலோ மீட்டர் வேகத்தில் ஆம்பன் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

New Delhi:

சூப்பர் புயலான ஆம்பன் கரையை நெருங்கி வரும் நிலையில், இந்தியா இரு மாபெரும் சவாலை எதிர்கொண்டு வருவதாக தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைவர் எஸ்.என்.பிரதான் தெரிவித்துள்ளார். NDTVக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக வலுவான ஆம்பன் புயல், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி மேற்கு வங்கத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. நாளை மதியம் மேற்கு வங்கத்தில் ஆம்பன் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் கடும் பாதிப்பு ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஆம்பன் புயல் முன்னெச்சரிக்கையாக தேசிய பேரிடர் மீடபு படையின் 41 குழுக்கள் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவுக்கு விரைந்துள்ளன. 

இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைவர் எஸ்.என். பிரதான் என்.டி.டி.விக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது-

ஏற்கனவே கொரோனா பாதிப்பு மேற்கு வங்கத்தில் கடுமையாக இருக்கிறது. இந்த சூழலில் ஆம்பன் புயல் முன்னெச்சரிக்கையாக கடலோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம். 

முதன் முறையாக கொரோனா மற்றும் ஆம்பன் புயல் என இரு பெரும் சவால்களை நாம் எதிர்கொள்கிறோம். 

பள்ளிகள், கல்லூரி கட்டிடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அவை மக்கள் தங்கும் தற்காலிக முகாம்களாக மாற்றப்படும். 

தேசிய பேரிடர் மீட்பு படையின் 21 குழுக்கள் மேற்கு வங்கத்திற்கும், 15 குழுக்கள் ஒடிசாவுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. மற்ற குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

இவ்வாறு அவர் தெரிவித்தார். மேற்கு வங்கத்தின் கடலோர பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார். தலைநகர் கொல்கத்தாவும் அலெர்ட் செய்யப்பட்டுள்ளது. 

நாளை மதியம் 180 கிலோ மீட்டர் வேகத்தில் ஆம்பன் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

.