This Article is From Oct 25, 2019

புதை குழியில் சிக்கிக் கொண்ட யானை : கிராம மக்கள் மீட்கும் காட்சி

Sundargarh, Odisha: உணவு தேடி பிர்டோலா கிராமத்தில் புகுந்துள்ளது. அப்போது ஒரு யானை அங்கிருந்த புதைக்குழியில் விழுந்துள்ளது.

புதை குழியில் சிக்கிக் கொண்ட யானை : கிராம மக்கள் மீட்கும் காட்சி

Sundargarh, Odisha: கிராம மக்களின் உதவியுடன் யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டது.

Sundargarh, Odisha:

உணவு தேடி கிராமத்தில் புகுந்த யானைக் கூட்டத்தில் இருந்த ஒரு யானை தவறி அங்கிருந்த புதைகுழியில் விழுந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது. 

ஒடிஸாவிலுள்ள சுந்தர்கார் மாவட்டத்தின் பிர்டோலா கிராமத்தை அடுத்த படகோன் வனப்பகுதியில் இருந்து யானைக்கூட்டம் புதன்கிழமை இரவு உணவு தேடி பிர்டோலா கிராமத்தில் புகுந்துள்ளது. அப்போது ஒரு யானை அங்கிருந்த புதைக்குழியில் விழுந்துள்ளது. 

இந்நிலையில் வியாழக்கிழமை காலை கிராம மக்கள் அந்த யானையை கண்டறிந்துள்ளனர். பின்னர் வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்புத்துறையினருடன் அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள், கிராம மக்களின் உதவியுடன் யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டது. 

icsq5tg

செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ வெளியிட்டுள்ள வீடியோவில் பெரிய கூட்டு முயற்சியினால் அதிகாரிகள் பல கிராமவாசிகளின் உதவியுடன் யானையை  புதைகுழியில் இருந்து மீட்பதை பார்க்கலாம். யானையை வெளியே இழுக்க ஜே.சி.பி இயந்திரங்களை பயன்படுத்த அதிகாரிகள் நினைத்தனர். ஆனால், சேறு காரணமாக அவ்வாறு செய்ய முடியவில்லை.

.