This Article is From Jan 29, 2019

பிளாஸ்டிக் பைகளை தடை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா? உயர்நீதிமன்றம் கேள்வி

பிளாஸ்டிக் பைகளை தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பிளாஸ்டிக் பைகளை தடை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா? உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் ஜன.1ஆம் தேதி முதல் சுற்றுச்சுழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் குவளைகள் போன்ற 14 வகையான பொருட்கள் தடை செய்யப்பட்டது.

மேலும், பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் வாழை இலைகள், பாக்குமட்டை தட்டுகள், தாமரை இலைகள் போன்றவற்றின் பயன்பாட்டினை ஊக்குவிக்கவும் ஆலோசனை வழங்கியதன் அடிப்படையில் கடந்த ஜூன் 25ம் தேதி முதல்வர் பழனிசாமி அரசாணை பிறப்பித்தார்.

இந்நிலையில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதால் தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகள் மீதான தடையை நீக்க வேண்டும் என பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா, இல்லையா என்பது குறித்து பிப்.4ம் தேதிக்குள் மத்திய அரசு, பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை வரும் பிப்.4ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.


 

.