இலங்கையில் சாதாரண நபரை போல வரிசையில் நின்று தாக்குதல் நடத்திய நபர்

SriLanka Blasts: இலங்கையில் தேவாலயங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர் ஈஸ்டர் காலை உணவு அருந்தும் வரிசையில் அமைதியாக நின்று கொண்டிருந்தார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. 

 Share
EMAIL
PRINT
COMMENTS
இலங்கையில் சாதாரண நபரை போல வரிசையில் நின்று தாக்குதல் நடத்திய நபர்

SriLanka Terror Attack: வெடிகுண்டுத் தாக்குதல்களில் சுமார் 35ற்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


Colombo: 

இலங்கையில் தேவாலயங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர் ஈஸ்டர் காலை உணவு அருந்தும் வரிசையில் அமைதியாக நின்று கொண்டிருந்தார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. 

கையில் தட்டோடு இருந்த அவர், முகமது அஸ்ஸாம் முகமது என்ற பெயரில் இரவு தங்குவதற்கு ஹோட்டல் புக் செய்திருந்தவர் ஆவார். அவர் ஹோட்டலில் கூடியிருந்தவர்கள் மத்தியில் வெடிகுண்டை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தியதாக அந்த ஹோட்டல் மேலாளர் தெரிவித்துள்ளார்.

"அது ஒரு மரண ஓலம். அதனை கேட்க முடியாதபடி இருந்தது" என்றார். "டாப் ப்ரோபேன் உணவகத்தில் ஈஸ்டர் வாரத்தில் அதிக பேர் உணவருந்த வருவார்கள். 8:30 மணிக்கெல்லாம் பரபரப்பாக இருக்கும் நேரத்தில் குழந்தைகள், குடும்பங்கள் கூடியிருப்பார்கள். 

தாக்குதல்  நடத்தியவர்களும் வரிசையில் சாதாரணமாக வந்ததை எப்படி நிர்வாகம் தவரவிட்டது என்று தெரியவில்லை" என்றார் அந்த உணவக மேலாளர். 

தாக்குதல் நடத்தியவரின் விவரங்கள் தவறாக பதிவிடப்பட்டுள்ளன என்று கூறினார். அவரது உடல்கள் பல பகுதிகளில் சிதறி இருந்ததாகவும் குறிப்பிட்டார். 

இந்த தாக்குதலில் இந்தியர்கள் ஐந்து பேர் உயிரிழந்துள்ளது உறுதியாகியுள்ளது. இலங்கையில் நேற்றைய தினம் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்களில் சுமார் 35ற்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக இலங்கை வெளியுறவு அமைச்சக செயளர் ரவிந்திர ஆரியசிங்க தெரிவித்துள்ளார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................