This Article is From Apr 24, 2019

"தாக்குதலால் தெருவில் கால் வைக்க பயமாக உள்ளது" இலங்கை வீரர் ஷனகா

27 வயதான ஆல்ரவுண்டர், ஈஸ்டர் கொண்டாட்டத்தை தனது நீண்ட பயணத்தால் ஏற்பட்ட களைப்பு காரணமாக தவிர்த்துள்ளார்.

தாக்குதலுக்கு பிறகு சர்ச்சுக்கு சென்று தன் தாயையும், பாட்டியையும் தேடியுள்ளார். அவர்கள் எந்த பாதிப்புமின்றி உயிர்பிழைத்துள்ளனர்.

Negombo, Sri Lanka:

இலங்கை கிரிக்கெட் வீரர் தசன் ஷனகா இலங்கை தொடர் குண்டுவெடிப்பிலிருந்து அதிர்ஷடவசமாக உயிர்தப்பியுள்ளார். ஈஸ்டர் அன்று நடந்த தாக்குதலில் 320 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல், ஷனகாவை தெருவில் கால் வைக்கவே அச்சுறுத்துவதாக கூறியுள்ளார்.

27 வயதான ஆல்ரவுண்டர், ஈஸ்டர் கொண்டாட்டத்தை தனது நீண்ட பயணத்தால் ஏற்பட்ட களைப்பு காரணமாக தவிர்த்துள்ளார். அவர் கலந்து கொள்ளும் தேவாலயத்தில் தான் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இது வரலாறு காணாத தாக்குதலாக பதிவாகியுள்ளது.

அரசு இந்த தாக்குதலுக்கு சில இஸ்லாமிய அமைப்புகளை சந்தேகிக்கிறது.

இந்த சம்பவம் குறித்து கூறிய ஷனகா "நான் எப்போதும் சர்ச்சுக்கு செல்பவன். அன்று களைப்பாக இருந்ததால் செல்லவில்லை" என்றார்.

மேலும், ஈஸ்டர் அன்று காலை தான் வீட்டில் இருந்த போது பெரிய சத்தம் கேட்டதாகவும், மக்கள் சர்ச்சிலிருந்து வெடிகுண்டு என்று கதறியபடி ஓடுயதாகவும் கூறியுள்ளார். "மொத்த சர்ச்சும் சிதைந்துள்ளது. இதனை நான் மறக்கவே மாட்டேன்" என்றார்.

"சர்ச்சின் அவலத்தை இப்போதும் காண முடியும், மனித உடல்கள், உடைந்த சிலைகள் என பார்க்கவே பயமாக உள்ளது" என்றார்.

"அந்த காட்சிகளை நாம் கண்டால் அவர்கள் யாரும் உள்ளே உயிர்பிழைக்க முடியாத அளவுக்கு தாக்கப்பட்டிருப்பார்கள் என்பது புரியும்" என்றார்.

தாக்குதலுக்கு பிறகு சர்ச்சுக்கு சென்று தன் தாயையும், பாட்டியையும் தேடியுள்ளார். அவர்கள் எந்த பாதிப்புமின்றி உயிர்பிழைத்துள்ளனர். பாட்டிக்கு மட்டும் தலையில் அடிபட்டுள்ளது.

ஷனகா, இலங்கை அணிக்காக 19 ஒருநாள், 27 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

.