This Article is From Aug 08, 2018

சமூக நீதிக்காக வாழ்வை அர்ப்பணித்தவர் - சோனியா காந்தி இரங்கல்

காங்கிரஸின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடிதம் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்

சமூக நீதிக்காக வாழ்வை அர்ப்பணித்தவர் - சோனியா காந்தி இரங்கல்

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு பல அரசியல் தலைவர்களும், பல துறை பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனிடையே காங்கிரஸின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடிதம் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். கருணாநிதியின் மரண செய்தி தன்னை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தனது குறிப்பில், "கருணாநிதி போன்ற ராஜதந்திரியை இனி இந்த நாடு பார்க்கமுடியாது. தனது வாழ்வை சமூக நீதிக்காக அர்ப்பணித்தவர். ஒடுக்கப்பட்டோர், ஏழை எளியோர் நலனுக்காகப் பாடுபட்டவர். எனக்குத் தந்தை போன்றவர். அவரது மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு. என் மீது அவர் காட்டிய கனிவையும், பரிவையும் என்றும் மறக்க மாட்டேன்” என்று வருத்தத்துடன் பதிவு செய்திருந்தார்.

முன்னதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

.