This Article is From Nov 03, 2018

மத்திய பிரதேச பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் மைத்துனர் காங்கிரசில் இணைந்தார்

காங்கிரஸ் கட்சியில் இணைந்த சஞ்சய் சிங் மசானி இந்த முறை மத்தியி பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறியுள்ளார்

வேலையின்மை மற்றும் தொழிற்சாலைகள் இல்லாதது மத்திய பிரதேசத்தின் முக்கிய பிரச்னை என்று சஞ்சய் சிங் மசானி கூறியுள்ளார்

New Delhi:

மத்திய பிரதேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாக முதல்வர் சிவராஜ் சிங் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் இருந்து வருகிறது. நடைபெறவிருக்கும் சட்ட சபை தேர்தல் பாஜகவுக்கு முக்கியமான ஒன்றாக இருக்கும் என கருதப்படுகிறது.

இந்த தேர்தலில் பாஜகவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் போட்டி கொடுக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதியுள்ளனர். இந்த நிலையில், சிவராஜ் சிங் சவுகானின் மனைவியுடைய சகோதரர் சஞ்சய் சிங் மசானி காங்கிரஸ் கட்சியில் கட்சியில் இணைந்துள்ளார்.

இதுகுறித்து பேட்டியளித்த மசானி, இந்த முறை காங்கிரஸ் கட்சிதான் ஆட்சிக்கு வரும் என்றார். மசானி காங்கிரசில் இணையும் நிகழ்ச்சியின்போது காங்கிரஸ் மூத்த தலைவர் கமல் நாத், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

a9rr4ve8

மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது

மசானி மேலும் கூறுகையில், மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. தொழிற்சாலைகளும் குறைந்து வருகின்றன. இதுதான் மாநிலத்தில் முக்கிய பிரச்னை. இதனை பாஜக சரியாக நிறைவேற்றாததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். குடும்ப அரசியலும் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மட்டும் உயர் பதவியை அளிப்பதும் பாஜகவில் அதிகரித்து வருகிறது என்றார்.

மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரே கட்டமாக நவம்பர் 28-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. முடிவுகள் டிசம்பர் 9-ம்தேதி அறிவிக்கப்படுகிறது.

.