This Article is From Sep 20, 2018

முஸ்லிம் பணியாளரை அடித்துக் கொன்றவர் பொதுத் தேர்தலில் போட்டியிடுகிறார்?

குற்றவாளியான சம்புலால் ரிகாருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என உத்தரப்பிரதேச நவநிர்மான் அமைப்பு உறுதி அளித்துள்ளது.

முஸ்லிம் பணியாளரை அடித்துக் கொன்றவர் பொதுத் தேர்தலில் போட்டியிடுகிறார்?

கொலைக் குற்றம் தொடர்பாக கடந்த டிசம்பர் முதல் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சம்புலால்.

Lucknow:

ராஜஸ்தானின் ராஜ்சாமந்த் பகுதியில் கடந்த டிசம்பரில் நடந்த ஒரு கொலை சம்பவம், வீடியோவாக பதிவு செய்யப்பட்டு அந்த காட்சிகள் வைரல் ஆகியது. ஒரு முஸ்லிம் நபரை கோடரியால் வெட்டிக் கொல்லும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றிருந்தன. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலையை உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சம்புலால் ரிகார் என்பவர் செய்துள்ளார். கொலை செய்யப்பட்டவர் அவரிடம் வேலை பார்த்த முகம்மது அப்ரசூல் (45வயது).

‘லவ்ஜிகாத்’ செய்ததால் பணியாளரை அடித்துக் கொன்றதாக ரிகார் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அவர் ஜோத் பூர் சிறையில் உள்ளார். இந்நிலையில் உத்தரப்பிரதேச நவநிர்மாண் சேனா அமைப்பு சார்பாக பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அதன் தலைவர் அமித் ஜானி வெளியிட்டுள்ளார்.

அதில் சம்புலாலின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து ஜானி அளித்த பேட்டியில், நாங்கள் ரிகாருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம். தன்னை தற்காத்துக் கொள்ளத்தான் அவர் இந்த காரியத்தை செய்தார். அவர் குற்றவாளியா, இல்லையா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும். இந்துத்வாவை காக்க அவர் நடவடிக்கை எடுத்தார். குற்றம் நிரூபிக்கப்படும் வரையில் அவர் தேர்தலில் போட்டியிடலாம் என்றார்.

.