This Article is From Jul 02, 2018

ஸ்டிரா பயன்பாட்டை தடை செய்தது சியாட்டில் அரசு

சட்டத்தை மீறி ஸ்டிரா பயன்படுத்துபவருக்கு, 250 அமெரிக்க டாலர் அபரதமாக விதிக்கப்படும்

ஸ்டிரா பயன்பாட்டை தடை செய்தது சியாட்டில் அரசு

அமெரிக்கா சியாட்டில் மாகாணத்தில் ஸ்டிரா உபயோகிக்க தடை செய்யப்பட்டுள்ளது.

பத்து வருடங்களுக்கு முன்னரே, ஒரு முறை பயன்படுத்தும் உணவு பொருட்களை மறுசுழற்சி செய்ய விதுமுறைகள் விதிக்கப்பட்டது. எனினும், ஸ்டிரா பயன்படுத்துவதை தடை செய்ய தவறிய சியாட்டில் அரசு, இந்த ஆண்டு அந்த சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. மருத்துவ காரணங்களினால் சிலர் ஸ்டிரா உபயோகப்படுத்த அரசு அனுமதிக்கிறது.

71 சதவித கடல் பறவைகள், 30 சதவித கடல் ஆமைகள், பிளாஸ்டிக் பொருட்களின் தாக்கத்தால் உயிரிழப்பதாக ஸ்டிராலெஸ் ஓஷன் என்று அமைப்பு தெரிவித்துள்ளது.

சட்டத்தை மீறி ஸ்டிரா பயன்படுத்துபவருக்கு, 250 அமெரிக்க டாலர் அபரதமாக விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. முதலில், ஸ்டிரா உபயோகிக்க கூடாது என்ற விதிமுறை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

வரும் செப்டம்பர் மாதத்திற்குள், சியாட்டில் மாகாணத்தில் இருந்து 2.3 மில்லியன் ப்ளாஸ்டிக் ஸ்டிராகளை அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது. #StopSucking என்ற பிரச்சாரம் மூலம், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஐநா முடிவெடுத்துள்ளது.

ஸ்டிரா உபயோகிக்காமல் குளிர் பானங்கள் குடிக்க, சரியான பாட்டில் மூடிகளை தயாரிக்குமாறு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பல முன்னணி நிறுவனங்களுக்கு ஸ்டிரா உபயோகமற்ற மூடிகளை தயாரிக்க கோரிக்க வைக்கப்பட்டுள்ளது.



(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)

.