This Article is From May 13, 2019

ஜம்மு காஷ்மீரில் 3 வயது குழந்தை பாலியல் பலாத்காரம் : வெடித்தது போராட்டம்

இந்த சம்பவம் ஜம்மு மற்று காஷ்மீர் மாநிலங்களில் அரசியல் கட்சிகள் பல்வேறு மத மற்றும் சமூக இயக்கங்களை சீற்றம் அடையச் செய்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் 3 வயது குழந்தை பாலியல் பலாத்காரம் : வெடித்தது போராட்டம்

குற்றஞ்சாட்டப்பட்டவரை மைனர் என்று தனியார் பள்ளியொன்று சான்றிதழைக் கொடுத்துள்ளது

Sumbal, Jammu and Kashmir:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்  மூன்று வயது சிறு குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட  சம்பவத்தால் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. பந்திப்பூர் மாவட்டத்தில் தன் அண்டை வீட்டின் ஒருவரால் அக்குழந்தை வன்புணர்வு சம்பவம் நிகழ்த்தப்பட்டது. இதனால் மாணவர்கள் பல இடங்களில் போராட்டத்தை முன்னெடுத்தனர். மாணவர்கள் பாதுகாப்புப் படையினருடனும், காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டதால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.

குற்றம் சாட்டப்பட்டவர் சிறப்பு விசாரணை குழுவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மூத்த காவல்துறை அதிகாரி  மருத்துவ அதிகாரி மருத்துவ அறிக்கை குழந்தை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளதை உறுதிபடுத்தியுள்ளது. அதனால் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு சட்டமான பாஸ்கோ கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் ஜம்மு மற்று காஷ்மீர் மாநிலங்களில் அரசியல் கட்சிகள் பல்வேறு மத மற்றும் சமூக இயக்கங்களை சீற்றம் அடையச் செய்துள்ளது. 

குற்றம் சாட்டப்பட்டவர் குழந்தைக்கு இனிப்பு கொடுத்து தனிமையான இடைத்திற்கு அழைத்துச் சென்றதாக பெற்றோர்கள் உள்ளூர் காவல் துறையிடம் தெரிவித்துள்ளனர். சம்பல் பகுதியில் அதிகாரப்பூர்வ சில கட்டுப்பாடுகள் உண்டு.  இணைய வேகம் குறைக்கப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டவரை மைனர் என்று தனியார் பள்ளியொன்று சான்றிதழைக் கொடுத்துள்ளது. இது கிராவாசிகளை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. கோபமடைந்தவர்கள் பள்ளிக்கு சீல் வைத்து தீ வைக்க முற்பட்டனர். பள்ளியின் முதல்வர் மற்றும் நெருங்கிய உறவினரையும் காவலில் வைத்துள்ளனர்.

மருத்துவ குழு குற்றம் சாட்டப்பட்டவரின் வயது குறித்து கொடும் சான்றிதழை மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்வோம் என்றும், பள்ளியின் சான்றிதழை எடுத்துக் கொள்ளவில்லை என்று மூத்த அதிகாரி தெரிவித்தனர்.

With inputs from ANI

.