பூங்கொத்து அளித்து சவுதி பெண்கள் வாகனம் ஓட்டுவதை வரவேற்ற காவல் துறையினர்

பெண்களுக்கான ஓட்டுனர் உரிமம் அளிக்கப்பட்டதை அடுத்து, சவுதி அரேபிய பெண்கள் நள்ளிரவில் சாலைகளுக்கு வந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

பூங்கொத்து அளித்து சவுதி பெண்கள் வாகனம் ஓட்டுவதை வரவேற்ற காவல் துறையினர்

ஹைலைட்ஸ்

  • பெண்கள் நள்ளிரவில் சாலைகளுக்கு வந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
  • கடந்த செப்டம்பர் மாதம், பெண்களுக்கான ஓட்டுனர் உரிமம் அளிக்கப்பட்டது
  • இதனால், பெண்களுக்கான வாகன பயிற்சி பள்ளிகள் சவுதியில் தொடங்கப்படுகிறது
சவுதி அரேபியா நாட்டில், பெண்கள் முன்னேற்றத்திற்காக கிடைத்த மிக பெரிய வெற்றி என்று அந்நாட்டு பெண்கள் கொண்டாடி வருகின்றனர். பாலின பாகுபாடு அதிகம் உள்ள சவுதியில், பல ஆண்டுகளாக பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு தடை செய்யப்பட்டிருந்தது. கடந்த செப்டம்பர் மாதம், பெண்களுக்கான ஓட்டுனர் உரிமம் சட்டப்பூர்வமாக அளிக்கப்பட உள்ளதாக மன்னர் சல்மான் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, கடந்த ஞாயிற்று கிழமை அன்று சட்டம் அமலுக்கு வந்தது.
 
சவுதி அரேபியா நாட்டில் முதன் முறையாக, ஓட்டுனர் உரிமம் பெற்ற பெண்கள் தங்கள் வாகனங்களை ஓட்டியபடி சாலைகளில் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சவுதி அரேபியாவின் சாலை போக்குவரத்து துறையினர் பூங்கொத்து கொடுத்து பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்டும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

"உங்களுக்கு எப்போதும் பாதுகாப்பு இருக்கும்", "பெண் ஓட்டுனர்களே, உங்களுக்கான பாதுகாப்பு எப்போதும் கிடைக்க வேண்டுகிறோம்" போன்ற சாலையோர வாசகங்கள் வைக்கப்பட்டிருந்தன.
 
சவுதி அரேபியா நாட்டின் இளவரசர் மொஹமத் பின் சல்மாணின் விருப்பதிற்கு இணங்க, பெண்களுக்கு ஓட்டுனர் உரிமம் அளிக்கும் முடிவை சவுதி அரசு எடுத்தது.

பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், நாட்டில் உள்ள பழைய விதிமுறைகளை மாற்ற வேண்டும் என்பாதற்காகவும் சவுதி அரசு இந்த முடிவை எடுத்தது. எனினும், இந்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் பலர் இருந்தாலும், பெண்கள் முன்னேற்றதிற்கான இந்த முடிவு சவுதி வரலாற்றில் முக்கியமான நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. இந்த சட்டம் அமல்படுத்தியதை அடுத்து, பெண்களுக்கான வாகன பயிற்சி பள்ளிகள் சவுதியில் அதிகமாக தொடங்கப்பட்டுள்ளன. இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், 2020 ஆம் ஆண்டிற்குள் மூன்று மில்லியன் பெண்கள் ஓட்டுனர் உரிமம் பெற்று வாகனம் ஓட்ட தொடங்கியிருப்பர் என்று தெரிவிக்கப்பட்டது.

(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)Click for more trending news


More News