This Article is From Jul 17, 2019

''400 கி.மீ. சென்று தாக்கும் ஏவுகனைகளை 2023 ஏப்ரலுக்குள் ரஷ்யா வழங்கும்'' : மத்திய அரசு

400 கிலோ மீட்டர் தொலைவில் வரும் எதிரிகளின் இலக்குகளை தரையில் இருந்து தாக்கும் வல்லமை கொண்டது எஸ் 400 ரக ஏவுகனைகள்

''400 கி.மீ. சென்று தாக்கும் ஏவுகனைகளை 2023 ஏப்ரலுக்குள் ரஷ்யா வழங்கும்'' : மத்திய அரசு

2018-ல் எஸ்-400 ஏவுகனைகள் வாங்குவது தொடர்பாக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

New Delhi:

தரையில் இருந்து 400 கிலோ மீட்டர் தூரமுள்ள எதிரியின் இலக்குகளை துல்லியமாக தாக்கும் எஸ் - 400 ரக ஏவுகனைகளை 2023 ஏப்ரலுக்குள் ரஷ்யா வழங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பான ஒப்பந்தம் கடந்த 2018 அக்டோபர் 5-ம்தேதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. ரஷ்யாவிடம் இருந்து ஏவுகனைகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்கா நெருக்கடி கொடுத்திருந்த நிலையில் அதனை மீறி இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 

கடந்த மாதம் இந்தியா வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ ரஷ்யாவிடம் இருந்து ஏவுகனை வாங்க கூடாது என்று வலியுறுத்தியிருந்தார். 

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் எல்லை அதிகமாக உள்ளது. குறிப்பாக சீனாவுக்கும் நமக்கும் இடையில் உள்ள சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டர் எல்லையை பாதுகாக்கும் பொறுப்பு மத்திய அரசிடம் இருக்கிறது.

இதேபோன்று பாகிஸ்தான் அச்சுறுத்தல், வங்கதேச பிரச்னை என பலவற்றையும் சமாளிக்க வேண்டியிருப்பதால் நவீன ஏவுகனைகளை வாங்கும் நிலைக்கு இந்தியா வந்துள்ளது. 

.