This Article is From Apr 09, 2020

பாதிப்பில் 2வது இடத்தில் உள்ள தமிழகத்திற்கு குறைவான நிதி ஒதுக்கியது ஏன்? உயர்நீதிமன்றம்

அப்போது, தமிழ்நாட்டுக்கு ஏன் அதிக நிதியை ஒதுக்கவில்லை என மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பாதிப்பில் 2வது இடத்தில் உள்ள தமிழகத்திற்கு குறைவான நிதி ஒதுக்கியது ஏன்? உயர்நீதிமன்றம்

பாதிப்பில் 2வது இடத்தில் உள்ள தமிழகத்திற்கு குறைவான நிதி ஒதுக்கியது ஏன்? உயர்நீதிமன்றம்

Chennai:

பாதிப்பில் 2-வது இடத்தில் உள்ள தமிழகத்திற்கு குறைவான நிதி ஒதுக்கியது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. 

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் கடந்த மார்ச்.24ம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தினார். இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு என்பது பொதுமக்களை
தனிமைப்படுத்த மட்டுமே உதவியுள்ளது. 

இது நோய்ப்பரவலை தடுத்திருக்கிறது என்றாலும் கூட கொரோனா வைரஸ் நோயை முற்றிலுமாக ஒழித்துவிடவில்லை. நேற்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் 738 பேர் உட்பட இந்தியா முழுவதும் 5,610 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களும் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளன. இந்நிலையில், கொரோனா பாதிப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு தங்களுக்கு  உதவ வேண்டும் என்றும், 15வது நிதிக்கமிஷன் நிதியை ஒதுக்க வேண்டும் என்று மாநிலங்கள் கோரி வந்தன.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் கடந்த 3ம் தேதி மாநில பேரிடர் மேலாண்மை நிதியத்துக்கு 11,092 கோடி ஒதுக்குவதாகவும், 15வது நிதிக்கமிஷன் பரிந்துரைப்படி தமிழகம், ஆந்திரா உட்பட 14 மாநிலங்களுக்கு 6,195 கோடி ஒதுக்குவதாகவும் அறிவித்தார். 

நிதியமைச்சரின் அறிவிப்பு படி, மகாராஷ்டிராவுக்கு 1,611 கோடியும், உத்தரப் பிரதேசத்துக்கு 966 கோடியும், மத்தியப் பிரதேசத்துக்கு 910 கோடியும், பீகாருக்கு 708 கோடியும், ஒடிசாவுக்கு 802 கோடியும், ராஜஸ்தானுக்கு 740.50 கோடியும்,  மேற்குவங்கத்துக்கு 505.50 கோடியும், தமிழகத்துக்கு 510 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு 157 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள  டெல்லிக்கு நிதி ஒதுக்கீடே செய்யப்படவில்லை.

இதற்கிடையே, ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என ராஜேந்திரகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாட்டுக்கு ஏன் அதிக நிதியை ஒதுக்கவில்லை என மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பாதிப்பில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ள நிலையில் குறைவான நிதி ஒதுக்கியுள்ளது. கொரோனா தொற்று குறைவாக உள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளது. தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள ரூ.510 கோடி போதுமானதாக இருக்காது என்று கூறி வழக்கு குறித்து மத்திய அரசு 2 வாரத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

.