This Article is From Dec 15, 2018

முடிவுக்கு வந்த இலங்கை அரசியல் சிக்கல்: நாளை பதவியேற்கிறார் ரணில்!

இலங்கையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற ரணில் விக்ரமசிங்கே பிரதமராக வரும் ஞாயிறன்று பதவி பிரமாணம் எடுத்துக்கொள்வார்

முடிவுக்கு வந்த இலங்கை அரசியல் சிக்கல்: நாளை பதவியேற்கிறார் ரணில்!

இலங்கையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற ரணில் விக்ரமசிங்கே பிரதமராக வரும் ஞாயிறன்று பதவி பிரமாணம் எடுத்துக்கொள்வார் என ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். மேலும் அதிபர் சிறிசேனா, விக்ரமசிங்கேவை புதிய பிரதமராக பதவி பிரமாணம் செய்ய சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த முடிவு அதிபர் சிறிசேனா மற்றும் சபநாயகர் கரு ஜெயசூர்யாவின் பேச்சுவார்த்தைக்கு பின் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே, "பிரதமர் பதவியிலிருந்து நாட்டின் நலன் கருதி ராஜபக்சே விலகுகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.

நமல் தனது ட்விட்டர் பக்கத்தில் '' நாட்டில் அமைதியை நிலைநாட்ட, முன்னாள் அதிபர் ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். எல்லை பாதுகாப்பு பிரச்சனையில் அதிபருடன் இணைந்து செயல்படவுள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இலங்கையின் பிரதமராக வாக்கெடுப்பில் வென்ற ரணில் விக்ரமசிங்கே தனது பெரும்பான்மையை நேற்று பாராளுமன்றத்தில் நிரூபித்தார். அதிபர் சிறிசேனா முன்னாள் அதிரபரை பிரதமராக அறிவித்தபின் இலங்கை அரசியலில் அமைதியற்ற சூழல் நிலவியது.

நேற்று பாராளுமன்ற‌த்தில் ரணிலுக்கு ஆதரவாக 117 வாக்குகள் கிடைத்தது. அதனால் பெரும்பான்மையை நிரூபித்தார் ரணில். சிறிசேனாவின் சொந்த வெறுப்பு தான் ரணிலை பதவியிலிருந்து நீக்க காரணம் என்ற கூறப்பட்டது.

கடந்த அக்டோபர் 26ம், தேதி சிறிசேனா ரணிலை பதவியிலிருந்து நீக்கி முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். ஆனால் அவரால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை.

டிசம்பர் 3ம் தேதி ராஜபக்சேவால் எந்த முடிவையும் பிரதமராக எடுக்க சட்டம் அனுமதிக்காது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

.